முகப்பு /செய்தி /இந்தியா / ‘மத்திய அரசின் நடவடிக்கையால் காஷ்மீரில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன’ – துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பேச்சு

‘மத்திய அரசின் நடவடிக்கையால் காஷ்மீரில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன’ – துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பேச்சு

மனோஜ் சின்ஹா

மனோஜ் சின்ஹா

வேளாண்மை, பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு, பெண்களை சக்திபடுத்துதல், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் கணிசமான வளர்ச்சியை ஜம்மு காஷ்மீர் எட்டியுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் காஷ்மீரில் குற்றச் சம்பவங்கள் குறைந்திருப்பதாக ஜம்மு காஷ்மீரின் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். நியூஸ் 18 நடத்திய தி ரைசிங் இந்தியா மாநாட்டில் பங்கேற்று மனோஜ் சின்ஹா பேசியதாவது-  ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி என்றும் நினைவில் இருக்கும் நாளாகும். அந்த நாளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பு சட்ட பிரிவு 370-யை நீக்கி நடவடிக்கை மேற்கொண்டது.

இதன் அடிப்படையில் காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு முதலில் எதிர்ப்புகள் இருந்தாலும், இந்த உறுதியான நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக குற்றச் செயல்கள் கணிசமாக குறைந்துள்ளது. வேளாண்மை, பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு, பெண்களை சக்திபடுத்துதல், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் கணிசமான வளர்ச்சியை ஜம்மு காஷ்மீர் எட்டியுள்ளது.

top videos

    சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. காஷ்மீர் மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அவர்தெரிவித்தார்.

    First published:

    Tags: NEWS18 RISING INDIA