உலகில் அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சனையாக புவி வெப்பமயமாதல் பார்க்கப்படுகிறது. மனிதனின் உயிர் நாடியாகக் கருதப்படும் தூய்மையான காற்று தொடங்கி, மழை போன்ற அனைத்து வாழ்வாதர விஷயங்களையும் நமக்கு தருவது மரங்களே. எனவே, பூமியின் நலனுடன் மனிதனின் நலத்தையும் மரங்கள் பாதுகாத்து தருகிறது.
எனவே தான் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மரங்களைக் காப்பாற்ற பல விதமான தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். புதிய செடி, மரங்களை தொடர்ந்து நட வேண்டும் எனவும், சிலர் மரங்களை வெட்டக்கூடாது என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மரங்களை காப்பாற்ற ராஜஸ்தான் புதுமையான அணுகுமுறையை எடுத்து வருகிறது.
அம்மாநிலத்தில் உள்ள நாகௌர் மாவட்டத்தில் உள்ள தௌசர் கா கெடா குர்ஜார் என்ற சாலை பகுதியில் ஒரு சிறிய காடு உள்ளது. இந்த காட்டில் உள்ள மரங்களை காப்பாற்ற ஒரு தனித்துவமான முறை பின்பற்றப்படுகிறது. இங்குள்ள மரங்கள் மற்றும் இயற்கை அழகைப் பாதுகாக்க உள்ளூர்வாசிகள் ஒரு தனித்துவமான முறையை செய்து காட்டியுள்ளனர். சுமார் 2 முதல் 3 கிமீ நீளமுள்ள இந்த சாலையில், மரங்கள் மற்றும் செடிகளுக்கு யாரும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு மரத்திலும் `ஜெய் ஸ்ரீராம்' என்று எழுதப்பட்டுள்ளது.
இயற்கையின் அங்கமான மரங்களும் கடவுள் தான். எனவே, யாராவது மரத்தை வெட்டவோ எரிக்கவோ நினைத்தால் அதில் உள்ள ராமரின் பெயரை அழித்து தான் செய்ய வேண்டும். எனவே, இந்த மரங்களை சேதம் செய்ய யாரும் தயங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தனித்துவமான முயற்சியை அப்பகுதி உள்ளூர் மக்கள் செய்துள்ளன. அப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள், அங்குள்ள மரங்களில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற எழுத்துக்களை பார்த்து ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.
மரங்கள் மற்றும் செடிகளில் ஜெய் ஸ்ரீராம் எழுதும் முன்னெடுப்பை செய்து காட்டியவர் அதே பகுதியைச் சேர்ந்த கிருபாராம் ஜி தேவரா. தற்போது மனிதன் தன் சுயநலத்திற்காக இயற்கையை அதிகமாக சுரண்டிக் கொண்டிருக்கிறான் எனவும், இயற்கையை காப்பாற்ற ஒவ்வொரு மரத்திலும் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகள், நாடு முழுவதும் 30 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம்... கின்னஸ் சாதனை படைத்த க்ரீன் மேன் இவர்தான்!
இந்த கிராமத்தை சேர்ந்த ராம் என்பவர் கூறியதாவது, "நமது வாழ்க்கையில் கடவுளுக்கு முக்கியத்துவம் தருவது போலவே, இயற்கைக்கும் முக்கியத்துவம் நாம் தர வேண்டும். சோறு இல்லாமல் கூட மனிதன் பல நாட்கள் வாழ முடியும். ஆனால் காற்று இல்லாமல் வாழ முடியாது. மரங்கள் நமக்கு அத்தகைய முக்கிய வாயுவை வழங்குகின்றன என்று கூறப்படுகிறது. மரங்களிலிருந்து ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அது இல்லாமல் மனிதன் வாழ முடியாது" என்றார். இயற்கையை கடவுளுடன் இணைத்து இந்த கிராம மக்கள் செய்த தனித்துவமான செயல் இணைய உலகிலும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Environment, Rajasthan