முகப்பு /செய்தி /இந்தியா / ரயில்வேயில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பா? தீயாய் பரவிய தகவல்.. விளக்கம் அளித்த ரயில்வே!

ரயில்வேயில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பா? தீயாய் பரவிய தகவல்.. விளக்கம் அளித்த ரயில்வே!

ரயில்வே

ரயில்வே

ரயில்வேயில் புதிதாக 20,000 பேரை வேலைக்கு எடுக்கப்போவதாக பரவி வரும் செய்தியை ரயில்வே நிர்வாகம் மறுத்து விளக்கம் அளித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

இந்திய ரயில்வேயில் 20,000 பேரை வேலைக்கு எடுக்கப்போவதாக போலி செய்தி பரவி வருவதாக ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது. அரசு வேலை மீதான மக்களின் மோகத்தை பயன்படுத்தி பல மோசடிகள் ஆண்டாண்டு காலமாக அரங்கேறி வருகிறது. அவ்வாறு ரயில்வே துறையில் பெரும் மோசடி செய்த கும்பல் ஒன்றை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த கும்பல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேருக்கு ரயில்வே வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ.2.68 கோடி மோசடி செய்துள்ளது. இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவராமன், டெல்லியைச் சேர்ந்த விகாஸ் ரானாவை கைது செய்துள்ளனர்.

முக்கிய குற்றவாளியான சதேந்தர் தூபே மற்றும் அவரது கூட்டாளி ராகுல் சௌத்ரி தலைமறைவாக உள்ளனர். இவர்களை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையான ஆர்பிஎப்-இல் 20,000 பேரை புதிதாக வேலைக்கு எடுக்கவுள்ளதாக ஊடகம், இணையதளங்களில் சமீப நாட்களாக செய்திகள் பரவி வருகிறது.

இதையும் படிங்க: 7 மணிநேரத்தில் 700 கிமீ பயணம்.. புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

இது உண்மை அல்ல போலி செய்தி என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ஆர்பிஎப் கான்ஸ்டபிள் பணிக்கு ஆள் எடுக்கப் போவதாக எந்த அறிவிப்பும் ரயில்வே சார்பில் வெளியிடப்படவில்லை எனக் கூறி ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

First published:

Tags: Fake News, Indian Railways, Jobs, RPF