முகப்பு /செய்தி /இந்தியா / 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி நாளை மேல்முறையீடு..!

2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி நாளை மேல்முறையீடு..!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Rahul Gandhi Sentence Case | மேல் முறையீடு செய்ய குஜராத் மாநிலம் சூரத்திற்கு, ராகுல் காந்தி நாளை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

  • Last Updated :
  • Gujarat, India

அவதூறு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து, ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில், மோடி சமூகத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக குற்றம்சாட்டி அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. குஜராத் மாநில சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து,மார்ச் மாதம் 23-ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. எனினும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

top videos

    ராகுல் காந்தி உடனடியாக மேல்முறையீடு செய்யாதது குறித்து பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டதற்கு,168 பக்க தீர்ப்பு குஜராத்தி மொழியில் இருப்பதால் மொழி பெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சட்ட வல்லுநர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்திற்கு, ராகுல் காந்தி நாளை செல்ல இருப்பதாகவும், சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    First published:

    Tags: Rahul Gandhi