முகப்பு /செய்தி /இந்தியா / தன்பாலின தம்பதிகளின் சமூகத் தேவைகள்.. குழு அமைக்க மத்திய அரசு முடிவு..

தன்பாலின தம்பதிகளின் சமூகத் தேவைகள்.. குழு அமைக்க மத்திய அரசு முடிவு..

தன்பாலின திருமணம்

தன்பாலின திருமணம்

தன்பாலின திருமணம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளது.

  • Last Updated :
  • New Delhi, India

தன்பாலின தம்பதிகளின் சமூகத் தேவையைப் பரிசீலிக்கக் குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தன்பால் ஈர்ப்பாளர்களுக்குச் சொத்துரிமை, இழப்பீடு, காப்பீடு உள்ளிட்ட உரிமைகளைப் பெறுவதற்கான சட்ட அங்கீகாரத்தை அவர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதன் மூலமாகவே வழங்க முடியும். இதனால், தங்கள் திருமணத்தைச் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த சான்றுதல் ஆவணத்தில், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது வெறும் நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை என்று எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து, தன்பாலின தம்பதிகள் திருமணத்தைச் சட்ட ரீதியாக அங்கீகரிக்காவிட்டாலும், அவர்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்பது தொடர்பாகப் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், 7வது நாளாக மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கூட இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றும் 46 நாடுகளில் வெறும் 6 நாடுகள் தான் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் கொடுத்துள்ளன என்றும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார்.

Also Read : ஜம்மு காஷ்மீரில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து..

top videos

    மேலும், கேபினட் செயலர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தன்பாலின தம்பதிகளுக்கான சமூகத் தேவைகள் பற்றி ஆராயப்படும் என்று மத்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. என்னென்ன நிர்வாக நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை ஆராய்வது குறித்து மனுதாரர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறினார். இதையடுத்து தங்கள் பதிலை மனுதாரர்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 9 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    First published:

    Tags: Central government, Same-sex Marriage, Supreme court