முகப்பு /செய்தி /இந்தியா / ‘அடுத்த தலைமுறைக்கான சிறந்த தொழில் முனைவோர்’ –ஃபோர்ப்ஸ் விருதை வென்ற இஷா அம்பானி

‘அடுத்த தலைமுறைக்கான சிறந்த தொழில் முனைவோர்’ –ஃபோர்ப்ஸ் விருதை வென்ற இஷா அம்பானி

விருதைப் பெற்றுக் கொள்ளும் இஷா அம்பானி.

விருதைப் பெற்றுக் கொள்ளும் இஷா அம்பானி.

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் விருதை பெற்றுக் கொண்ட இஷா அம்பானி, தனது பெற்றோருக்கும் குழந்தைகளான ஆதியா ஷக்தி மற்றும் கிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

'அடுத்த தலைமுறைக்கான சிறந்த தொழில் முனைவோர்' (GenNext Entrepreneur) என்ற விருதை இளம் தொழிலதிபர் இஷா அம்பானிக்கு வழங்கி ஃபோர்ப்ஸ் இந்தியா கவுரவித்துள்ளது. பிரபல வர்த்தக இதழான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் ஆண்டுதோறும் தலைமைத்துவத்தில் சிறந்த விளங்குவோருக்கு  விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வர்த்தகத்தின் சேர்மனாக இருக்கும் இஷா அம்பானிக்கு அடுத்த தலைமுறைக்கான சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகள் ஆவார்.

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் விருதை பெற்றுக் கொண்ட இஷா அம்பானி, தனது பெற்றோருக்கும் குழந்தைகளான ஆதியா ஷக்தி மற்றும் கிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் 45 ஆவது பொதுக்குழு கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அப்போது, ரிலையன்ஸ் ரீடெய்ல் பிஸ்னஸ் (ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தின்) சேர்மனாக இஷா அம்பானி அவரது தந்தை முகேஷ் அம்பானியால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

இஷா அம்பானி, பிரமால் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்தை கடந்த 2018 டிசம்பர் 12 ஆம் தேதி திருமணம் முடித்தார். முன்னதாக இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் 2018 செப்டம்பர் மாதம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு முன்னதாக உதய்ப்பூர் அரண்மனையில் அளிக்கப்பட்ட விருந்தில் முக்கிய அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருமணத்தில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளின்டன், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ஆமிர் கான், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

top videos

    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 3 குழந்தைகள். அவர்களில் ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோர் இரட்டையவர்கள் ஆவர். இவர்களுக்கு 31 வயது ஆகிறது. கடைசி மகனின் பெயர் ஆனந்த் (வயது 27). பிரபல வைர வர்த்தகர் ரஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகாவை ஆகாஷ் அம்பானி 2019 மார்ச்சில் திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு 2 வயதில் பிரித்வி என்ற மகன் உள்ளார்.

    First published:

    Tags: Isha Ambani