நாம் செல்லமாக வளர்க்கும் விலங்குகளை இந்தியாவில் ரயில்களில் அழைத்துச் செல்ல முடியாது. ஆனால் இனி செல்லப்பிராணிகளை ரயில் பயணங்களில் அனுமதிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. செல்லப் பிராணிகளுக்குத் தனியாக டிக்கெட் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டண விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
தற்போது நிலவரப்படி செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் இரண்டு வழிகள் தான் இருக்கிறது. ஒன்று கூபே கோச் உள்ள ரயிலில் கூபேவை புக் செய்தால் அதில் அழைத்துச் செல்லலாம். மற்றொரு வழி ரயில்களில் பார்சல் புக்கிங் கவுண்டரில் உங்கள் செல்லப்பிராணிகளை அதற்கான கூண்டில் அடைத்து அதைக் கூண்டுடன் பார்சல் கோச்சில் ஏற்றி அனுப்ப முடியும். இந்த இரு வழிகளைத் தவிர வேறு வழிகள் இல்லை. இதை மனதில் வைத்துத் தான் ரயில்வே அமைச்சகம் செல்லப்பிராணிகளுக்குாகன டிக்கெட்டை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கான தனி விதிமுறைகளை வகுத்து வருகிறது. செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்ல பல ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக அந்த செல்லப்பிராணிகளுக்குச் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட்டதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். இது மட்டுமல்ல பயண தேதியிலிருந்து 24-48 மணி நேரத்திற்கு முன்னதாக டாக்டரிடம் எடுக்கப்பட்ட ஃபிட்னஸ் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும்.
பயணத்தின் போது தனது செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்பவர்கள் அதற்கான உணவு, தண்ணீர், செல்லப்பிராணிகளுக்கு பிடித்தமான பொம்மைகளையும் பயணத்தின் போது உடன் வைத்திருக்க வேண்டும். அதோடு பயண நேரத்திற்குக் குறைந்த பட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பே செல்லப்பிராணிகளை ரயில்நிலைய நடைமேடைக்கு அழைத்து வந்து விட வேண்டும்.
Also Read : ஆல்-நியூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுக செய்ய உள்ள Odysse நிறுவனம்!
பயண நேரத்தில் அது மற்றவர்களைத் தொந்தரவு செய்யாத வகையில் அதன் உரிமையாளர் பார்த்துக்கொள்ள வேண்டும் என விதிமுறை உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் தயாராகி வருகிறது. ஒரு சில நாட்களில் இது வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மேலும் ஐஆர்சிடிசி செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்த செல்ல பிரத்தியேக வெப்சைட் ஒன்றையும் உருவாக்கி வருகிறது. உங்கள் ரயில் பயணத்தில் செல்ல பிராணிகளையும் அழைத்துச் செல்ல விரும்பினால் அந்த வெப்சைட்டில் செல்ல பிராணிகளுக்கான டிக்கெட்டையும் எடுத்துச் செல்ல முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IRCTC, Pet Animal, Train