முகப்பு /செய்தி /இந்தியா / குஜராத் வீரர்களின் கூலான ஹேர் ஸ்டைல், புது லுக்... பின்னணியில் இருக்கும் நபர் இவர்தான்!

குஜராத் வீரர்களின் கூலான ஹேர் ஸ்டைல், புது லுக்... பின்னணியில் இருக்கும் நபர் இவர்தான்!

ஹார்திக் பாண்டியாவுடன் ஹிரென்னி கெச்சி

ஹார்திக் பாண்டியாவுடன் ஹிரென்னி கெச்சி

குஜராத் டைடன்ஸ் வீரர்களின் புதிய ஹேர் ஸ்டைல் லுக்கின் பின்னணியில் இருப்பவர் சிகை அலங்கார நிபுணர் ஹிரேனி கெச்சி.

  • Last Updated :
  • Gujarat, India

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணி, குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் ஆட்டம், வீரர்கள், வெற்றி போன்றவற்றுடன் மற்றொரு தனித்துவமான அம்சம் நடந்தது. நீங்கள் வீரர்களை கூர்ந்து கவனிக்கும் தன்மை கொண்டவர்கள் என்றால் அதை நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். அன்றைய தினத்தில் குஜராத் அணி வீரர்கள் பலரும் கூலான புதிய ஹேர் ஸ்டைலுடன் களமிறங்கினர். குஜராத் வீரர்களின் இந்த புதிய ஸ்டைல் லுக்கின் பின்னணியில் இருப்பவர் சிகை அலங்கார நிபுணர் ஹிரேனி கெச்சி.

குஜராத் மாநிலத்தின் கோண்டல் நகரைச் சேர்ந்தவர் ஹிரேனி. சிகையலங்கார நிபுணராக தனது தொழிலை கற்று, அவர் ராஜ்கோட்டில் ஒரு ப்யூட்டி பார்லரை நிறுவினார். குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் வீரர்கள் பலர் ஹிரேனியுன் ரெகுலர் வாடிக்கையாளர்கள். அவர்கள் ஹிரேனியுடன் இருக்கும் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த இளைஞரின் சிறந்த திறமையைப் பாராட்டி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி ஊக்குவகின்றனர்.

மானவ் சுதர், முகமது ஷமி, அபினவ் மனோகர், மோஹித் ஷர்மா, யாஷ் தயாள் மற்றும் உர்வில் படேல் உள்ளிட்ட சில பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பலரின் ஹேர் ஸ்டைலை இவர் மாற்றியமைத்துள்ளார். எனவே, இவர் தற்போது இணையத்தில் டிரெண்டாகி பலரும் இவரை ஆர்வத்துடன் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வண்ண மலர்களால் மூழ்கிய ஜம்மு காஷ்மீர்.. துலிப் தோட்டத்தில் கலைகட்டிய சீசன்..!

ஐபிஎல் 2023 முதல் போட்டியில் முதலில் பேட் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. அணியின் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அபாரமாக ஆடி 52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். 179 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாஹா மற்றும் சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல அடித்தளத்தை போட்டு தந்தனர். குறிப்பாக சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இறுதியில் குஜராத் அணி 19.2 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

First published:

Tags: Gujarat Titans, Hairstyle