முகப்பு /செய்தி /இந்தியா / கொட்டித்தீர்த்த கனமழை... சுரங்கப் பாதையில் சிக்கிய கார்... பெண் ஐடி ஊழியர் பரிதாப பலி..!

கொட்டித்தீர்த்த கனமழை... சுரங்கப் பாதையில் சிக்கிய கார்... பெண் ஐடி ஊழியர் பரிதாப பலி..!

வெள்ளத்தில் சிக்கிய கார்

வெள்ளத்தில் சிக்கிய கார்

தேங்கி நின்ற மழை நீரில் கார் சிக்கி கொண்டு, நீரில் மூழ்கியது. இதில் காரில் பயணித்த 5 பேரும் மூழ்கினர்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. திடீரென கொட்டி தீர்த்த மழையால் அந்நகரில் உள்ள சாலைகள், சுரங்கப் பாதைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழை நீரானது குளம் போல தேங்கி நின்றது.

இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதா அருகே உள்ள கே.ஆர். சர்க்கிள் சுரங்கப் பாதையில் மழை நேங்கி தேங்கி நின்ற நிலையில், அவ்வழியாக சென்ற கார் ஒன்று அதை கடந்து சென்றுள்ளது. ஆனால், தேங்கி நின்ற மழை நீரில் கார் சிக்கி கொண்டு, நீரில் மூழ்கியது. இதில் காரில் பயணித்த 5 பேரும் மூழ்கினர். காருக்குள் இருந்தவர்கள் வெளியேற தீவிரமாக முயற்சித்தனர்.

அதற்குள்ளாக மழை நீரும் அங்கே வேகமாக ஓடி வந்து நீ மட்டம் உயரத் தொடங்கியது. அக்கம் பக்கம் உள்ளவர்களும் வேகமாக அங்கு வந்து காரில் இருந்தவர்களை மீட்டு அருகே உள்ள மர்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 22 வயதான இளம் பெண் பானு ரேகா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பானுரேகா, பெங்களூரு இன்போசிஸ் நிறுவனத்தில் சமீபத்தில் தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் இங்கு புதிய வீடு ஒன்றை பார்த்து குடியேற இருந்தார். இதற்காக ஊரிலிருந்த தனது குடும்பத்தார் அழைத்து தனது புதிய வீட்டை காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: அரசு அலுவலகத்தின் அடித்தளத்தில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டு குவியல்.. பரபரப்பு சம்பவம்

top videos

    இவர்கள் அனைவரும் வீட்டை பார்த்து விட்டு திரும்பும் போது தான் கார் சுரங்கப்பாதையில் சிக்கி இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீட்கப்பட்ட மற்றவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாநில முதலமைச்சர் சித்தராமையா மருத்துவமனைக்கு விரைந்து பானு ரேகா குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவரது குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

    First published:

    Tags: Bengaluru, Flood, Karnataka