நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமாக, இண்டிகோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மிகப்பெரிய சர்வதேச விரிவாக்கத் திட்டங்களின் கீழ் ஆப்பிரிக்கா, மத்திய ஆசியாவில் உள்ள ஆறு இடங்களுக்கு விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் எந்தெந்த நாடுகளுக்கு எப்போது இயக்கப்படவுள்ளது? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.
விமான சேவையை விரிவுப்படுத்தும் இண்டிகோ: பெரிய சர்வதேச விரிவாக்கத் திட்டங்களைத் தொடங்கியுள்ள இண்டிகோ நிறுவனம், கேரியர் கென்யாவில் உள்ள நைரோபி மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவை இணைக்கும் விமான சேவையை வருகின்ற ஜூலை பிற்பகுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் மும்பையிலிருந்து நேரடி விமானங்களுடன் தொடங்கும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அற்புதமான புதிய திட்டங்களின் மூலம் புதிய இடங்களுக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியா என 4 கண்டங்களில் எங்களுடைய விமான தடத்தை விரிவுபடுத்த மேம்படுத்தப்பட்ட விமான சேவை உதவியாக இருக்கும் என்கிறார் இண்டிகோ நிறுவனத்தின் சி.இ.ஓ பீட்டர் எல்பர்ஸ். மேலும் 78 உள்நாட்டு இடங்களுக்கு அடுத்தப்படியாக 33 சர்வதேச இடங்களை இப்போது நேரடியாகத் தொடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் படி, இண்டிகோ விமான சேவையானது, டெல்லியில் இருந்து ஜார்ஜியா, அஜர்பைஜான், உசெப்கிஸ்தான், கஜஸ்தான் ஆகிய நாடுகள் வழியாக ஹாங்காங்கிற்கு விமானத்தை மீண்டும் தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் திபிலிசி, ஜார்ஜியா & பாகு, அஜர்பைஜான் மற்றும் செப்டம்பரில் தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானின் அல்மாட்டி ஆகியவற்றுடன் இணைக்கப்படும்" என்று இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் டெல்லியில் இருந்து ஹாங்காங்கிற்கு தினசரி சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா தொற்று சமயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய வழித்தடங்கள், புதிய சேவை ஜூன் மற்றும் செப்டம்பர் 2023 க்கு இடையில் 174 புதிய வாராந்திர சர்வதேச விமானங்களைச் சேர்க்கும்" என்று கூறியது. இதற்கிடையில், இண்டிகோ துருக்கிய ஏர்லைன்ஸ் உடனான குறியீடு பகிர்வு இணைப்புகள் மூலம் ஐரோப்பாவுடனான தனது இணைப்பை இந்நிறுவனம் வலுப்படுத்துகிறது.
தற்போது இண்டிகோ இஸ்தான்புல் வழியாக ஐரோப்பாவில் 33 இடங்களுக்கு இணைப்பை வழங்குகிறது. தற்போது 57 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு சந்தைப் பங்கைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, 300க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டுள்ளதோடு தினசரி 1,800க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flight, Flight travel