முகப்பு /செய்தி /இந்தியா / News18 Rising India | உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது... நியூஸ் 18 சர்வேயில் மக்கள் கருத்து...!

News18 Rising India | உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது... நியூஸ் 18 சர்வேயில் மக்கள் கருத்து...!

நியூஸ் 18 சர்வே முடிவுகள்

நியூஸ் 18 சர்வே முடிவுகள்

நியூஸ் 18 ரைசிங் இந்தியா நிகழ்வின் ஒரு பகுதியாக நாட்டின் வளர்ச்சி நிலை குறித்து மக்களிடம் சர்வே நடத்தப்பட்டது.

  • Last Updated :
  • Delhi, India

இந்தியா மீதான உலக நாடுகளின் மதிப்பானது கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக உயர்ந்துள்ளதாக நியூஸ் 18 நிறுவனம் நடத்திய சர்வே முடிவுகளில் மக்கள்  தெரிவித்துள்ளனர்.

நியூஸ் 18 நிறுவனம் ரைசிங் இந்தியா என்ற நிகழ்ச்சியை டெல்லியில் கடந்த மார்ச் 29, மார்ச் 30 ஆகிய தேதிகளில் நடத்தியது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு உலகளவில் இந்தியா ஏற்படுத்தியுள்ள மாற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நாட்டின் வளர்ச்சி நிலை குறித்து மக்களிடம் சர்வே நடத்தப்பட்டது. பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவின் உட்கட்டமைப்பு உருவாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் நடத்திய சர்வேயின் படி, இந்த காலக்கட்டத்தில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பானது உயர்ந்துள்ளதாக 75 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். 25 சதவீதம் மக்கள் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல, ட்விட்டர் தளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் 69.80 சதவீத மக்கள் இந்தியாவின் மதிப்பு முன்னேறியதாகவும், 30.20 சதவீத மக்கள் வீழ்ச்சி கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் வணிக சூழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இன்ஸ்டாகிராமில் 58 சதவீத மக்களும், ட்விட்டரில் 67.20 சதவீத மக்கள் நல்ல முன்னேற்றம் என வாக்களித்துள்ளனர். முன்னேற்றம் ஏற்படவே இல்லை என இன்ஸ்டாவில் 28 சதவீத மக்களும், ட்விட்டரில் 26.60 சதவீத மக்களும் தெரிவித்துள்ளனர்.

2014க்குப் பின் நாட்டின் உட்கட்டமைப்பு கட்டுமான வேகம் குறித்த கேள்விக்கு இன்ஸ்டாவில் பதில் அளித்த 85 சதவீதம் பேர் இதுவரை இல்லாத அளவில் சிறப்பான முன்னேற்றம் என்றுள்ளனர். 15 சதவீதம் இல்லை என மறுத்துள்ளனர். ட்விட்டரில் 70.60 சதவீதம் நல்ல முன்னேற்றம் எனவும், 29.40 சதவீதம் பேர் இல்லை எனவும் பதில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: நியூஸ்18 குழுமம் எடுத்த முயற்சியைப் பாராட்டுகிறேன்... மான் கீ பாத் குறித்த புத்தகத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

top videos

    டெல்லியில் நடைபெற்ற ரைசிங் இந்தியா நிகழ்வில் இந்தியாவில் கடைக்கோடியில் இருந்து சமுதாய முன்னேற்றத்திற்காக உழைத்த மக்களைக் கொண்டாடும் விதமாக 20 ரியல் ஹீரோக்களை கௌரவித்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: NEWS18 RISING INDIA, Survey