முகப்பு /செய்தி /இந்தியா / கோடைக் கால ஏற்பாடு..! 217 சிறப்பு ரயில்களை இயக்கும் இந்திய ரயில்வே

கோடைக் கால ஏற்பாடு..! 217 சிறப்பு ரயில்களை இயக்கும் இந்திய ரயில்வே

மாதிரி படம்

மாதிரி படம்

பயணிகளின் வசதிக்காகவும் தேவையற்ற சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், இந்திய ரயில்வே கோடை காலத்தை முன்னிட்டு 217 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக ஏப்ரல் 11 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடைக்காலம் துவங்கி விட்ட நிலையில் பலரும் கோடை விடுமுறையை அனுபவிப்பதற்காக குடும்பத்தோடு அவரவர் சொந்த ஊர்களுக்கும், பல்வேறு வித சுற்றுலா தளங்களுக்கும் செல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் பயணத்தை மேற்கொள்ளும் போது கூட்ட நெரிசல் அதிகரித்து அனைவருக்கும் சிரமம் உண்டாகும்.

எனவே பயணிகளின் வசதிக்காகவும் தேவையற்ற சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், இந்திய ரயில்வே கோடைக்காலத்தை முன்னிட்டு 217 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக ஏப்ரல் 11 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயில்கள் மொத்தமாக 4,010 முறை பயணங்களை மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் கோடை காலங்களில் மட்டுமே பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு ரயில்கள் இந்தியாவில் பல்வேறு முக்கிய ரயில் வழித்தடங்களை இணைக்கும் விதத்தில் இயங்க உள்ளது. குறிப்பாக பிரபலமான சுற்றுலா தளங்களான ஆன பாட்னா, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய வழித்தடங்களின் செல்லும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Read More : நாட்டிலேயே உயரமான அம்பேத்கர் சிலை தெலங்கானாவில் திறப்பு... இத்தனை நவீன வசதிகளா?

 அதில் 69 சிறப்பு ரயில்கள் தென்மேற்கு ரயில்வே பிரிவிலும், மத்திய தெற்கு பிரிவில் 48 ரயில்களும் இயங்க உள்ளன. தென்மேற்கு ரயில்வே பகுதியில் ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகியவை உள்ளடங்கியுள்ளன. அதுபோலவே மேற்கு ரயில்வேயை பொறுத்தவரை 40 சிறப்பு ரயில்களும் தென்னிந்திய ரயில்வே பொருத்தவரை 20 சிறப்பு ரயில்களும் இயங்க உள்ளன.

மத்திய மற்றும் மத்திய கிழக்கு ரயில்வேயை பொருத்தவரை இரு பகுதிகளிலும் தலா 10 சிறப்பு ரயில்கள் உள்ளன. இதில் பீஹார் கிழக்கு மத்திய ரயில்வே பகுதியில் வருகிறது. பீகாருக்கு அளிக்கப்படும் 10 சிறப்பு ரயில்களில் மொத்தமாக 216 முறை பயணங்களை மேற்கொள்ளும் என தெரிகிறது. மேலும் கிழக்கிந்திய ரயில்வே வழித்தடத்தில் நான்கு ரயில்கள் இயங்க உள்ளன. முக்கியமாக மேற்கு வங்க மாநிலம் இந்த பகுதியின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வடமேற்கு ரயில்வேயை பொறுத்தவரை கோடையில் 16 சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளன. வடக்கு ரயில்வே பகுதியில் எந்தவித சிறப்பு ரயில்களும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் ஆகியவை வடக்கு ரயில்வேயில் கீழ் வருகின்றன.

top videos

    ஆனால் தற்போது வரை சிறப்பு ரயில்களின் பெயர், எண், தேதி மற்றும் வழித்தடம் ஆகியவை இந்திய ரயில்வேயினால் அறிவிக்கப்படவில்லை. இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு மிக விரைவிலேயே இந்திய ரயில்வேயிடம் இருந்து முறையான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Indian Railways, Tourism