முகப்பு /செய்தி /இந்தியா / உக்ரைனில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு... மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்..!

உக்ரைனில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு... மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்..!

உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மாணவர்கள்

உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மாணவர்கள்

மாணவர்கள் கட்டாயம் 2 ஆண்டுகள் இண்டர்ன்ஷிப் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

ரஷ்யா-உக்ரைன் போரால் சுமார் 18,000 இந்திய மருத்துவ மாணவர்கள், படிப்பை பூர்த்தி செய்யாமல் நாடு திரும்பினர். அவர்கள் கல்வியை தொடர்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் மருத்துவ கல்வியை பூர்த்தி செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, எந்த மருத்துவ கல்லூரியிலும் சேராத மாணவர்களுக்கு, இரண்டு பகுதிகளாக தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.

top videos

    இதுதொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதிலில், இந்திய மருத்துவ பாடத்திட்டப்படி எழுத்து தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட சில மருத்துவ கல்லூரிகளில் செய்முறை தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்வை முடித்த பிறகு, 2 ஆண்டுகள் சுழற்சி முறையில் பயிற்சி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு கண்டிப்பாக ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

    First published:

    Tags: Medical Students, Russia - Ukraine, Supreme court