இந்தியாவில் தற்போது கோடைக் கால விடுமுறை என்பதால் இதமான குளிர் பிரதேசமான இமயமலைப் பகுதிகளில் சுற்றுலாவாசிகள் குவிந்து வருகின்றன. உத்தரகாண்ட், இமாச்சல், ஜம்மு காஷ்மீர் போன்ற வடமாநிலங்கள் மட்டுமல்லாது, சிக்கிம் போன்ற வடகிழக்கு மலைப்பிரதேசங்களுக்கும் சமீப காலமாக ஆர்வத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர்.
அந்த வகையில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களான லாச்சுங் மற்றும் லாச்சென் பள்ளத்தாக்கிற்கு ஏராளமான பயணிகள் சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நேற்று திடீரென கனமழை பொழிந்தது. இந்த கனமழை காரணமாக அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்தன.
திடீரென ஏற்பட்ட பேரிடர் பாதிப்பால் சுமார் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாவாசிகள் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து அரசு வழிகாட்டுதல் பேரில் மாநில பேரிடர் ஆணையம் மீட்பு பணியில் இருந்தது. அதோடு, இந்திய ராணுவமும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.
இந்த அதிரடி மீட்பு நடவடிக்கையில் 216 ஆண்கள், 113 பெண்கள், 54 குழந்தைகள் என சுமார் 500 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் மூன்று ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கு முதலுதவி தரப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2000 ரூபாய் நோட்டு விவகாரம்: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ...
மேலும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்கும் பணிகளும் வேகமாக மேற்கொள்ளப்படுகிறது. பயணிகளின் உடல்நலனை சோதிக்க மூன்று மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian army, Sikkim