ஐநாவின் 2023 ஆண்டிற்கான நீர் மாநாட்டிற்கு முன்னதாக ஐக்கிய நாடுகளின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கை 2023(World Water Development Report 2023 ) செவ்வாயன்று வெளியிடப்பட்டது. அதில், 2050 ஆம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் நாடாக இந்தியா இருக்கும் என்று கூறியுள்ளது.
ஐ.நா. நீர் மாநாடு, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் தண்ணீர் தொடர்பான முதல் பெரிய ஐ.நா கூட்டமாகும். மேலும் அனைவருக்கும் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் என்ற நிலையான வளர்ச்சி இலக்கை (SDG) நோக்கிய குறிப்பிடத்தக்க படியாகக் கருதப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை 2016 இல் 933 மில்லியனிலிருந்து 2050 இல் 1.7-2.4 பில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது அதிலும் இந்தியா மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐநா அறிக்கையில் நீர் அழுத்தத்தில் வாழும் சுமார் 80% மக்கள் ஆசியாவில், குறிப்பாக, வடகிழக்கு சீனா மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழ்கின்றனர் என்று கணக்கிட்டுள்ளது. உலகளவில், இரண்டு பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை. 3.6 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் சுகாதார வசதி இல்லை.
"அளவுக்கதிகமான நுகர்வு மற்றும் அதிகப்படியான வளர்ச்சி, நீடிக்க முடியாத நீர் பயன்பாடு, மாசுபாடு மற்றும் கட்டுப்படுத்தப்படாத புவி வெப்பமடைதல் ஆகியவை மனிதகுலத்தின் உயிர்நாடியை துளி துளியாக வடிகட்டுகின்றன. அதன் அளவு அபரிமிதமாக குறைந்து வருகின்றன" என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நீர் பிரச்சனை குத்து குறிப்பிடும்போது “தண்ணீர்-ஆற்றல்-உணவு இணைப்பு ஒரு எல்லைக்கு அப்பாற்பட்ட சூழலில் மிகவும் முக்கியமானது. இந்த சிக்கலை தீர்க்கும் ஒரு கூட்டாண்மை இந்தியா மற்றும் நேபாளம் இடையே மகாகாளி ஒப்பந்தத்தால் (பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம்) நிறுவப்பட்டது.
இது நீர் மற்றும் ஆற்றல் பாதுகாப்பை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு தரப்பினருக்கும், பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம் நீண்ட கால தாமதமானாலும், நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை குறைப்பதில் பல நன்மை பயக்கும் விளைவுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அனால் இது மட்டும் போதுமானது இல்லை. மேலும் பல விரிவான திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் வளரும் மக்கள் தோள்களை நீரின்றி தவிக்கும் நிலை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க: ஃபிட்னசில் மிரட்டும் 84 வயது தாத்தா.. இதுதான் ஆரோக்கியத்தின் ரகசியமாம்..!
மேலும் உலக அளவில் நீர் ஒரு பூதாகார பிரச்சினையாக இருப்பதால், முக்கியத் துறைகளில் பரவியுள்ள நீர் மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைகளுக்கு கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு முக்கியம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: United Nation, Water Scarcity