முகப்பு /செய்தி /இந்தியா / சற்று குறைந்த கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் உயிரிழப்பு எத்தனை?

சற்று குறைந்த கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் உயிரிழப்பு எத்தனை?

கொரோனா

கொரோனா

Covid cases: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் சனிக்கிழமை 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை 10,000 ஆக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்து 193ஆக சனிக்கிழமை அன்று பதிவானது. அது ஞாயிறு அன்று 10 ஆயிரத்து 112 ஆக குறைந்துள்ளது.

top videos

    நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 556-ல் இருந்து 67 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.சனிக்கிழமை 10 ஆயிரத்து 765 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாயிரத்து 9833 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    First published:

    Tags: Corona, Covid-19