இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு பல மாதங்களுக்குப் பிறகு 10,000ஐ தாண்டியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரத்தின் படி, கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 பாதிப்பு 10,158ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் நாட்டில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,998ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய பாதிப்பு தினசரி 7,830ஆக இருந்த நிலையில், இன்று 30 சதவீதம் உயர்வை கண்டு 10,000ஐ கடந்துள்ளது. இதன்மூலம் கடந்த 200 நாள்களில் இல்லாத அளவிற்கு தினசரி கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது. XBB.1.16 வகை தொற்று பரவல் காரணமாகவே இந்த பாதிப்பு எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் XBB.1.16 வகை தொற்று 21.6 சதவீதம் பாதிப்பு ஏற்படுத்திய நிலையில், மார்ச் மாதம் இது 35.8 சதவீதமாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை அடுத்த 10-12 நாள்கள் தொடர் உயர்வை காணும் என சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, தற்போதைய கோவிட்-19 பரவலால் தீவிர பாதிப்புக்கு ஆளாவோரின் எண்னிக்கை முன்பை காட்டிலும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, கேரளா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தினசரி பாதிப்பு உயர்வை கண்டுள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு.. 2 தமிழக வீரர்கள் மரணம்
தமிழ்நாடு பொருத்தவரை புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது. 243 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,489 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, CoronaVirus, Covid-19