முகப்பு /செய்தி /இந்தியா / நாடுமுழுவதும் மேலும் 10.753 பேருக்கு கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் 21 பேர் பலி

நாடுமுழுவதும் மேலும் 10.753 பேருக்கு கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் 21 பேர் பலி

கொரோனா

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000 ஐ நெருங்கியுள்ளது.

  • Last Updated :
  • New Delhi, India

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 10,753 ஆக பதிவாகியுள்ளது.

இதனுடன் இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,720 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,628 உள்ளது. மேலும் தொற்றினால் பாதிக்கப்பட்டு 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் அதிகமாகக் கேரளாவில் புதிதாக 1,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் 485 பேர், ஹிரியானவில் 398 பேர், டெல்லியில் 349 பேர், ராஜஸ்தானில் 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read : "3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்றைக்குள் வெளியிடாவிட்டால்..." - ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை

மேலும் தமிழ்நாடு உட்பட சத்தீஸ்கர், குஜராத், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona, Corona spread, CoronaVirus