கடந்த 24 மணி நேரத்தில் 699 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 96 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.
இந்த புதிய பாதிப்புகளில் வெறும் 5 மாநிலங்கள் இருந்து மட்டும் 75% க்கும் அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கேரளாவில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 144 ஆக உள்ளது.அடுத்ததாக மகாராஷ்டிராவில் 128 பேரும்,குஜராத்தில் 118 பேரும், தமிழ்நாட்டில் 76 பேரும், கர்நாடகாவில் 71 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதேசங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கண்டறியப்படவில்லை.
அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் 435 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 617 பேர் ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையை விட நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதிகபட்சமாக கேரளாவில் 1,869 பேரும், மகாராஷ்டிராவில் 1,364 பேரும், தமிழ்நாட்டில் 402 பேரும் நோய்த் தொற்றுக்கு தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் (Daily positivity rate) 0.71% ஆகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 0.91% (Weekly positivity rate) ஆகவும் உள்ளது. அதே சமயம் டெல்லியில் இந்த விகிதம் 7% ஆகவும், கோவாவில் இந்த விகிதம் 7% ஆகவும் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.