முகப்பு /செய்தி /இந்தியா / நாட்டில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு.. டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உஷார் நிலை!

நாட்டில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு.. டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உஷார் நிலை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உஷார் நிலையில் உள்ளன.

  • Last Updated :
  • Delhi, India

சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் தினசரி கோவிட்-19 பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 மாதங்களில் இல்லாத வகை நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3,095 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், 5 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,000ஐ கடந்துள்ளது. நாடு முழுவதும் 15,208 பேர் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். நோய் தொற்று விகிதத்தை தினசரி பாசிடிவிட்ட ரேட் 2.61 சதவீதமாக உள்ளது.

பாதிப்பு வேகமாக பரவும் டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, கேரளா போன்ற மாநிலங்களில் உஷார் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாதிப்பு நிலைமை குறித்து சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவைக்குள் செல்போனில் ஆபாச படம் பார்த்து சிக்கிய பாஜக எம்எல்ஏ.. விளக்கம் கேட்டு நோட்டீஸ்

மேலும், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலகளில் அரசு மாவட்ட மருத்துவமனை நிர்வாகங்களை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பின் தீவிரம், உயிரிழப்புகள் தற்போது குறைந்தே காணப்பட்டாலும் மக்கள் உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

top videos
    First published:

    Tags: Arvind Kejriwal, Corona, Covid-19, Delhi