முகப்பு /செய்தி /இந்தியா / 6 மாதங்களில் இதுதான் அதிகம்... நாடு முழுவதும் கிடு கிடுவென உயரும் கொரோனா பாதிப்பு...!

6 மாதங்களில் இதுதான் அதிகம்... நாடு முழுவதும் கிடு கிடுவென உயரும் கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில், ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் 3 ஆயிரத்து 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது நேற்றுடன்  அதாவது புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் 40 சதவிகிதம் அதிகமாகும். தற்போது ஒட்டுமொத்தமாக 13 ஆயிரத்து 509 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க; ‘தந்தையை எதிர்த்தேன்… என் மீதான பாலியல் துன்புறுத்தல் நிறுத்தப்பட்டது’: குஷ்பு

top videos

    இதே போன்று மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிக அளவில் பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோனா பரவும் வீதம் 2 புள்ளி 73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அச்சமடையாமல், எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    First published:

    Tags: CoronaVirus, Covid-19