முகப்பு /செய்தி /இந்தியா / 2022-ல் பால், இறைச்சி, முட்டை உற்பத்தி அதிகரிப்பு: கால்நடை வளர்ப்பு புள்ளியியல் அறிக்கையில் தகவல்!

2022-ல் பால், இறைச்சி, முட்டை உற்பத்தி அதிகரிப்பு: கால்நடை வளர்ப்பு புள்ளியியல் அறிக்கையில் தகவல்!

கால்நடை பொருட்கள் உற்பத்தி

கால்நடை பொருட்கள் உற்பத்தி

உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai |

மத்திய அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா. கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறையின் செயலர் (AHD) மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில்,மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சத்தின் ஆண்டு வெளியீடான 'அடிப்படை கால்நடைப் புள்ளி விவரங்கள் 2022'-‘Basic Animal Husbandry Statistics  2022’ ஐ வெளியிட்டார். அது நாட்டில் பால், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியில் அதிகரிப்பைக் குறிப்பிட்டுள்ளது.

கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடை உற்பத்தி மற்றும் விலங்குகளை பாதிக்கும் நோய்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை பொருட்கள் பாதுகாப்பு உள்கட்டமைப்பு போன்ற பிற தகவல்களைப் பற்றிய முக்கியமான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான பால், முட்டை, இறைச்சி மற்றும் கம்பளி போன்ற நான்கு முக்கிய கால்நடைப் பொருட்களின் (MLPs) உற்பத்தி மதிப்பீடுகளின் தரவுகள் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 20வது கால்நடை கணக்கெடுப்பு, கால்நடைகள் மற்றும் கால்நடைப் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தரவு, மற்றும் கால்நடை துறையின் பொருளாதார பங்களிப்பு பற்றிய நுணுக்கமான தரவுகளையும் இந்த அறிக்கை கொண்டுள்ளது.

2020-21ல் பால் உற்பத்தி 209.96 மில்லியன் டன்னாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த பால் உற்பத்தி 221.06 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டு உற்பத்தி 5.29% அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. ஒரு நபருக்கு தினசரி 444 கிராம் பால் கிடைப்பதாக கணக்கிட்டுள்ளது..

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அயல்நாட்டு / கலப்பின கால்நடைகளின் பால் உற்பத்தி 6.16% அதிகரித்துள்ளது மற்றும் உள்நாட்டு கால்நடைகளின் பால் உற்பத்தி 6.13% அதிகரித்துள்ளது. 2021 உடன் ஒப்பிடும்போது எருமைகளின் பால் உற்பத்தி 4.44% அதிகரித்துள்ளது மற்றும் உள்நாட்டு எருமைகள் மொத்த உற்பத்தியில் 31.58% பங்களிப்பை அளித்தன. அதைத் தொடர்ந்து கலப்பின கால்நடைகள் 29.91% பங்களித்தன.

மொத்த பால் உற்பத்தியில் அயல்நாட்டு பசுவின் பங்கு 1.92% என்று கணக்கெடுப்பு காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள மொத்த உற்பத்தியில் ஆட்டுப்பாலின் பங்களிப்பு 2.93% ஆகும். ராஜஸ்தான் (15.05%), உத்தரப் பிரதேசம் (14.93%), மத்தியப் பிரதேசம் (8.60%), குஜராத் (7.56%) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (6.97%) ஆகிய மாநிலங்களின் உற்பத்தி சேர்ந்து நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் 53.11% பங்களிக்கின்றன.

நாட்டின் மொத்த முட்டை உற்பத்தி 129.60 பில்லியன் எண்ணிக்கையாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 6.19% அதிகரித்துள்ளது. ஒரு நபருக்கு ஆண்டுக்கு 95 முட்டைகள் கிடைக்கும். முதல் ஐந்து முட்டை உற்பத்தி செய்யும் மாநிலங்களாக ஆந்திரப் பிரதேசம் (20.41%), தமிழ்நாடு (16.08%), தெலுங்கானா (12.86%), மேற்கு வங்காளம் (8.84%) மற்றும் கர்நாடகா (6.38%) உள்ளன. இந்த மாநிலங்கள் மொத்த முட்டை உற்பத்தியில் 64.56% பங்களிக்கின்றன.

அதே போல நாட்டின் இறைச்சி உற்பத்தியை எடுத்துக்கொண்டால்,முந்தைய ஆண்டை விட 5.62% அதிகரித்து 9.29 மில்லியன் டன்களாக உள்ளது. அதில், கோழி இறைச்சி உற்பத்தி 4.78 மில்லியன் டன்கள் ஆகும். மொத்த உற்பத்தியில் 51.44% பங்களிக்கும் இதன் உற்பத்தி வளர்ச்சி கடந்த ஆண்டை விட 6.86% அதிகரித்துள்ளது. “மஹாராஷ்டிரா (12.25%), உத்தரப் பிரதேசம் (12.14%), மேற்கு வங்கம் (11.63%), ஆந்திரப் பிரதேசம் (11.04%) மற்றும் தெலுங்கானா (10.82%) ஆகியவை இறைச்சி உற்பத்தியில் முதல் ஐந்து மாநிலங்களாகும்.

இதையும் பாருங்க : வந்தே பாரத் ரயில் ஒட்டிய இந்தியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவ்!

இறைச்சி உற்பத்தியில் 51.44% கோழிப்பண்ணை மூலம் பங்களித்தது. "நாட்டின் மொத்த இறைச்சி உற்பத்தியில் எருமை, ஆடு, செம்மறி ஆடு, பன்றி மற்றும் கால்நடைகள் முறையே இறைச்சி உற்பத்தியில் 17.49%, 13.63%, 10.33%, 3.93% மற்றும் 3.18% பங்களிக்கின்றன" என்று கணக்கெடுப்பு கூறியது. புரதத் தேவைகளுக்காக அதிகமான மக்கள் முட்டை மற்றும் கோழிக்கறியைத் தேர்வு செய்கிறார்கள். இதனால் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியும் அதிகரித்துக்ளதாக இந்திய கோழி வளர்ப்பு கூட்டமைப்பின் தலைவர் ரன்பால் தண்டா கூறினார்.

First published:

Tags: Meat, Milk Production, Union cabinet Ministry