உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலியில் உள்ள சிபி கஞ்ச் பகுதியில் கானா கவுந்தியா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அயான் என்ற 12 வயது சிறுவன் வசித்து வந்து வந்தார். இச்சிறுவன் நேற்று தனது நண்பர்களுடன் வழக்கம் போல தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கிருந்த தெருநாய்கள் பயந்து வந்து சிறுவர்கள் துரத்தி தாக்கத் தொடங்கியது. அதைப் பார்த்து சிறுவர்கள் பயந்து ஓடத் தொடங்கினர். ஓடும் போது சிறுவன் அயான் தரையில் தவறி விழவே அவன் மீது நாய்கள் பாய்ந்து கடித்து குதறியது. இந்த கொடூர தாக்குதலில் சிறுவன் படுகாயம் அடைந்தான். சிறிது நேரத்தில் அப்பகுதியாக சென்றவர்கள் நாய்களை விரட்டி சிறுவனை நாய்களிடம் இருந்து மீட்டனர்.
படுகாயம் அடைந்த சிறுவன் அயான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நாய்கள் தாக்குதலில் மற்றொரு 5 குழந்தையும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. தெருவில் நடமாடும் நபர்களை நாய்கள் கடித்து பாதிப்புக்குள்ளாக்கும் விபரீத சம்பவங்கள் சமீப காலமாகவே அதிகம் நிகழ்கின்றன.
இதையும் படிங்க: “ப்ளே பாயாக சுற்றும் ஷமி... பாலியல் தொழிலாளர்களுடன் உறவு”- உச்சநீதிமன்றத்தில் ஷமியின் மனைவி பரபரப்பு புகார்
இதில் பெரும்பாலும் சிறார்களே பாதிக்கப்படும் அவல நிலை உள்ளது. இதே பரேலி மாவட்டத்தில் இரு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமி தெரு நாய்களால் கடிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog, Uttar pradesh