முகப்பு /செய்தி /இந்தியா / மணிப்பூர் கலவரம்: அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊரடங்கில் தளர்வு!...

மணிப்பூர் கலவரம்: அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊரடங்கில் தளர்வு!...

மணிப்பூரில் கலவரம் காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது

மணிப்பூரில் கலவரம் காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது

Manipur Riot | கலவரம் காரணமாக மணிப்பூரில் மட்டும் நீட் தேர்வு இன்று நடத்தப்படவில்லை

  • Last Updated :
  • Manipur, India

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்குவதற்காக ஊரடங்கில் 3 மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கும் பிறசமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. கடந்த 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடந்த மோதல்களில் வீடுகள், வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இருதரப்பு மோதல்களில் 54 பேர் இதுவரை உயிரிழந்தனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அங்கு பாதுகாப்புப் பணிகளை ராணுவமும், மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளன. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: கர்நாடகா தேர்தல் 2023 - இரண்டாவது நாளாக பிரம்மாண்ட சாலை பேரணி... தீவிர வாக்கு சேகரிப்பில் பிரதமர் மோடி

இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சுராசந்த்பூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் மணிப்பூரில் இருந்து அசாமுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு ஏதுவாக காலை 7 மணி முதல் பகல் 10 மணி வரை ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. மணிப்பூரில் மட்டும் நீட் தேர்வு இன்று நடத்தப்படவில்லை.

top videos

    First published:

    Tags: Manipur