முகப்பு /செய்தி /இந்தியா / 5 ஆண்டு பழக்கம்... 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கடைக்காரர்.. பகீர் சம்பவம்!

5 ஆண்டு பழக்கம்... 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கடைக்காரர்.. பகீர் சம்பவம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஜார்கண்டில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

  • Last Updated :
  • Jharkhand, India

ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இருந்து 125 கிமீ தொலைவில் உள்ள பகுதி சாஸ். இது பொகாரோ மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு அசோக் ஜன்ஜாரியா என்ற நபர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு வயது 37. அந்த கடைக்கு அருகே பெண் ஒருவரும் கடை நடத்தி வருகிறார்.

இருவரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அருகருகே கடை நடத்தி வருவதால் நல்ல பழக்கம் உள்ளது. அந்த பெண்ணுக்கு 6 வயதில் மகள் ஒருவர் உள்ளார். தற்போது பள்ளி விடுமுறை நாள் என்பதால் சிறுமியும் தாயுடன் கடைக்கு வந்து செல்கிறார். பக்கத்து கடைக்காரரான அசோக் மற்றும் அங்குள்ள குழந்தைகளுடன் சிறுமி பேசி விளையாடுவார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறுமி தனது தாயுடன் கடைக்கு வந்துள்ளார். கடைக்கு மேல் தளத்தில் அங்கிருந்த சிறுவர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். தாய் வழக்கம் போல தனது கடை வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். மாலை நேரத்தில் சிறுவர்கள் அங்கிருந்து செல்ல, சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதை கவனித்த பக்கத்து கடைக்காரர் அசோக், சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து தனியாக அழைத்து சென்றுள்ளார்.

தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். சிறுமி கூக்குரலிட்டு அழத் தொடங்கிய நிலையில், அசோக் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மகளின் குரல் கேட்டு பதறிப்போய் வந்து பார்த்த தாய் அதிர்ச்சியில் உறைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுமிக்கு ஏதும் ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பார்கிங் பகுதியில் தூங்கிய குழந்தை... கார் மோதி பலியான சோக சம்பவம்...

top videos

    சம்பவம் தொடர்பாக தாய் கொடுத்த புகாரின் பேரில் அசோக்கை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தனது மகளுக்கு இத்தகைய அவலத்தை ஏற்படுத்த அசோக்கை தூக்கிலிட வேண்டும் என தாய் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

    First published:

    Tags: Crime News, Jharkhand, Minor girl, Rape