முகப்பு /செய்தி /இந்தியா / செயலியில் டாக்ஸி கார் புக் செய்து டிரைவரிடம் இருந்து காரை திருடிய கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்

செயலியில் டாக்ஸி கார் புக் செய்து டிரைவரிடம் இருந்து காரை திருடிய கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்

 கார் திருட்டு

கார் திருட்டு

ஓலா டிரைவரை தாக்கி அதில் பயணித்த பயணிகளே காரை திருடி சென்ற பரபரப்பு சம்பவம் குருகிராம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

  • Last Updated :
  • Haryana, India

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பகுதிகளில் வாடகை டாக்சி சேவையான ஓலா கார்களை ஓட்டி வருபவர் ஹரிஷ் குமார். இவர் உத்தரப் பிரதேசத்தின் அசாம்கர் பகுதியைச் சேர்ந்தவர். வேலை நிமித்தமாக டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிகிழமை அன்று நள்ளிரவு வேளையில் ஹரியானாவில் உள்ள குருகிராம் ரயில் நிலையத்தில் ஒரு பயணியை தனது ஓலா காரில் இறக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட தயாராக இருந்தார்.

அப்போது அவரது ஓலா சேவை தேவை என்று ஒரு புக்கிங் வந்துள்ளது. அருகே உள்ள பிக்கப் பாயின்டில் சென்ற போது காரில் நான்கு பயணிகள் ஏறியுள்ளனர்.அவர்கள் செக்டார் 89-ஏ என்ற பகுதிக்கு சென்று இறக்கிவிட வேண்டும் என கோரிய நிலையில், அவர்களை ஏற்றி பயணித்துள்ளார். இடத்தை அடைந்த போது அவர்கள் பணம் தரவே, மீதிப்பணத்தை எடுக்க தனது பர்சை எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில் அவர்கள் மூவரும் ஓட்டுநர் குமாரை தாக்கி அவரை காரை விட்டு வெளியேற்றி, அந்த காரை திருடி சென்றுவிட்டனர். அப்போது தான் அவர்கள் பயணிகள் அல்ல, திட்டமிட்டு காரை கடத்த வந்த கும்பல் என்பது ஓட்டுநர் குமாருக்கு தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: மகன் முன்னரே மனைவியை கத்தியால் கொன்ற காவலர்.. அதிர்ச்சி சம்பவம்

இந்த திருட்டு சம்பவத்தில் காருடன் குமார் தனது ஐபோன், ரூ.8,000 ரொக்கப்பணம், கிரெடிட் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவையும் இழந்துள்ளார். இது தொடர்பாக செக்டார் 10 ஏ காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம் என உதவி ஆய்வாளர் சத்பீர் கூறியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Crime News, Gurugram, Ola Cabs, Stealing, Theft