முகப்பு /செய்தி /இந்தியா / மரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1 கோடி.. காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

மரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1 கோடி.. காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

மரத்தில் பிடிபட்ட ஒரு கோடி ரூபாய் பணம்

மரத்தில் பிடிபட்ட ஒரு கோடி ரூபாய் பணம்

பணம் என்ன மரத்தில் காய்க்கிறதா என்ற வாசகத்தை நிஜமாக்கும் விதமாக ஒரு சம்பவம் தேர்தல் ஜுரத்தில் இருக்கும் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடாக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் புயல் வேகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.

பிரமதர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னின்று பாஜகவுக்கு பரப்புரை செய்கின்றனர். ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டி வருகின்றன. இது ஒரு புறம் இருக்க தேர்தலில் பெருமளவில் பணம் விளையாடுவதால் வருமான வரித்துறை போன்ற அமைப்புகளும் பரபரபப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகின்றன.

கடந்த ஒரு வார காலமாகவே வருமான வரித்துறை மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற ரெய்டு ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் உள்ள மரம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியது.

அங்குள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள புத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக நிற்பவர் அசோக்குமார் ராய். இவரது சகோதரர் சுப்பிரமணிய ராய் மைசூரில் வசிக்கிறார். இவரது வீட்டில் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று நடைபெற்ற அதிரடி சோதனையில் முதலில் வீட்டுக்குள் பணம் ஏதும் சிக்கவில்லை.

இதையும் படிங்க: “ப்ளே பாயாக சுற்றும் ஷமி... பாலியல் தொழிலாளர்களுடன் உறவு”- உச்சநீதிமன்றத்தில் ஷமியின் மனைவி பரபரப்பு புகார்

top videos

    இதைத் தொடர்ந்து வெளியே உள்ள பூந்தொட்டி, தண்ணீர் தொட்டி போன்ற பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அழகான மரம் ஒன்றில் பை ஒன்று பாதுக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பையை கைப்பற்றி சோதனை நடத்திய போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதில் சுமார் ரூ.1 கோடி பணம் ரொக்கமாக இருந்ததாக அதிகாரிகள் கூறி அதை பறிமுதல் எடுத்து சென்றனர். அத்துடன் சகோதரர் சுப்பிரமணிய ராய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    First published:

    Tags: Karnataka Election 2023, Tamil News