நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக மோட்டார் வாகன சட்டம் விதிக்கப்பட்டு, அதை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும், கார் போன்ற 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. இதை மீறினால், அபராதத் தொகைகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், பீகாரை சேர்ந்த ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அபராதத்திற்காக கூறப்பட்ட காரணம் அத்தகையது. பீகாரைச் சேர்ந்த கிருஷ்ண குமார் ஜா என்பவர் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று ரயிலில் பனாரஸ் சென்றுள்ளார். அப்போது அவருக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி ரூ.1,000 அபராதம் வந்துள்ளது.
அதில் 2020 அக்டோபரில் இவர் சீட் பெல்ட் அணியாததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால் கிருஷ்ண குமாரிடம் காரே இல்லை. அவர் வைத்திருப்பது ஸ்கூட்டி பைக் தான். அதில் எப்படி சீட் பெல்ட் அணிவது எனத் திகைத்துப் போனார் கிருஷ்ண குமார்.
தொடர்ந்து இந்த விஷயத்தை அவர் பீகாரில் உள்ள போக்குவரத்து காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதைத் தொடர்ந்து அவர்கள் விளக்கம் தந்துள்ளனர். முன்பென்னாலம் சலானை கைப்பட எழுது அனுப்புவோம், இப்போது, இணையத்தின் மூலம் உருவாக்கப்பட்டு சலான் தருவதால் அதில் தவறு நடத்திருக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது பாய்ந்து குதறிய தெரு நாய்கள்.. 12 வயது சிறுவன் பரிதாப மரணம்
இதை ஆராய்ந்து தவறை உரிய முறையில் திருத்திக்கொள்கிறோம் என்று பீகார் போக்குவரத்து காவல் அதிகாரி பல்பீர் தாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் இதே போன்று ஒடிசாவைச் சேர்ந்த அபிஷேக் கார் என்ற நபர் பைக் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியவில்லை என ரூ.1,000 தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar, Viral News