நடந்து முடிந்த கர்நாடகா சட்டப்பேரவைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் 136 தொகுதிகளிலும் பாஜக 65 இடங்களிலும் வெற்றியை உறுதி செய்யும் நிலையில் உள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றியை உறுதிசெய்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே இவ்விவகாரத்தில் கடும் போட்டி எழுந்துள்ளது.
இந்த நிலையில், மல்லிக்கார்ஜீன கார்கே இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் டி.கே.சிவகுமார், சித்தராமையா, ரன்தீப்சிங் சுர்ஜீவாலா, கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ரந்தீப் சிங், ’கர்நாடகா மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும், கர்நாடகா மக்கள் ஜனநாயகத்திற்கு வழிகாட்டியுள்ளதாகவும், 40% கமிஷன் அரசிடம் இருந்து கர்நாடகா விடுதலை பெற்றுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிக்க : கர்நாடகா முதல்வர் யார்? சித்தராமையாவா? சிவகுமாரா? மேலிடம் எடுக்கப்போகும் அந்த முடிவு!
பிறகு பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்த வெற்றியால் ஒட்டுமொத்த நாடும் உற்சாகமடைந்துள்ளதாகவும், தேச ஒற்றுமை பயணத்தில் ராகுல் சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய டி.கே.சிவகுமார், நாளை மாலை 5 மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் முறைபடி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தனிநபர் நலனை விட கட்சியே முதன்மையானது என டி.கே சிவகுமார் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.