பொதுவாக, மருந்துகளுக்கு 10% சுங்க வரியும், உயிர்காக்கும் மருந்துகள்/ தடுப்பூசிகளின் ஒரு சில பிரிவுகளுக்கு சலுகையாக 5% அல்லது வரி விலக்கும் அளிக்கப்படும். முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான சிறப்பு மருந்துகளுக்கு ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரிய வகை நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கும் சுங்க வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இதுபோன்ற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுகளின் விலை அதிகம் என்பதால் அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. 10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு இது போன்ற அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வருடந்தோறும் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை தேவைப்படும். இந்நிலையில் அவர்களின் சிகிச்சை நலன் கருதி இறக்குமதி வரியில் இருந்து முற்றாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயிலில் பயணிக்கும் வயதானவர்கள், பெண்களுக்கு குட் நியூஸ்.. இனி பெர்த் பிரச்னை இல்லை..
இந்த சலுகையைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மருத்துவ அதிகாரி அல்லது மத்திய/ மாநில சுகாதார சேவை இயக்குநரிடமிருந்து சான்றிதழ் ஒன்றை பொருட்களை இறக்குமதி செய்யும் நபர் சமர்ப்பிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி விலக்கால் கணிசமான தொகை சேமிக்கப்படுவதோடு, நோயாளிகளுக்கு பெரும் நிவாரணமும் கிடைக்கும் எனவும் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health, Import duty, Medicines