இந்தியாவில் தற்போது கோடைக்காலம் உச்சம்தொட ஆரம்பித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் தீவிர வெயிலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. முற்பகல் 11 மணியில் இருந்து நண்பகல் 3 மணிவரை வெயிலின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த நேரத்தில் வெளியே செல்வதை முடிந்தால் தவிர்க்க வேண்டும், அல்லது உரிய முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும் என மக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் பல மாநிலங்களுக்கு வெப்ப காற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அடுத்த 4-5 நாள்களுக்கு மேற்கு வங்கம், பீகார், கடலோர ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப காற்று பாதிப்பு ஏற்படும். மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அடுத்த இரு நாள்களுக்கு வெப்ப காற்று வீசும்.
எனவே, மேற்கண்ட மாநிலங்களில் அடுத்த சில நாள்களில் வெப்பநிலை உச்சம் தொடும் என்பதால் ஆரெஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து மேற்கு வங்கத்தில் இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு கல்லி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: போக்குவரத்து காவலரை 20கி.மீ தூரம் காரில் இழுத்து சென்ற போதை ஆசாமி.. அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ...
மேலும், ஒடிசாவிலும் சில பகுதிகளில் 42,43 டிகிரி வெப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் வெப்பம் தாங்க முடியாமல் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heat Wave, Indian meteorological department, Summer Heat