முகப்பு /செய்தி /இந்தியா / வெப்பக்காற்று தீவிரமா வீசப்போகுது... எச்சரிக்கையா இருங்க... வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!

வெப்பக்காற்று தீவிரமா வீசப்போகுது... எச்சரிக்கையா இருங்க... வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!

வெப்பக்காற்று வீச்சு

வெப்பக்காற்று வீச்சு

நாட்டின் வடகிழக்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இயல்பை விட வெப்பம் உச்சம் தொடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் பல பகுதிகளுக்கு வெப்பக்காற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கோடைக்காலம் சில வாரங்களாக தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை மூலம் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது. பல மாநிலங்களில் கடந்த வாரம் ஆரெஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த சில நாட்களில் வெப்பக்காற்று தீவிரமாக வீச வெப்பநிலை உச்சம் தொடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை மையத்தின் அறிக்கையின் படி, நாட்டின் வடகிழக்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இயல்பு நிலையை விட வெப்பம் உச்சம் தொடும் என்றுள்ளது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் தீவிர வெப்பக்காற்று வீசும். உத்தரப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படுகிறது.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக, பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையும், இயக்கும் நேரத்தில் மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் ஒரு வார காலம் கல்வி நிறுவனத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரிபுராவில் ஏப்ரல் 18இல் இருந்து 23 வரை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலக மக்கள் தொகையில் முதலிடம்.. சீனாவை முந்திய இந்தியா - ஐநா ஆய்வுத் தகவல்

ஒடிசாவில் கல்வி நிறுவனம் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு காலை 6.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கி 11 மணிக்கு நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பீகாரின் பாட்னா பகுதியில் உள்ள பள்ளிகளில் காலை சீக்கிரம் வகுப்புகள் தொடங்கி காலை 10.45 மணிக்கு நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியிலும் மத்தியத்திற்குப் பிறகு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Heat Wave, Indian meteorological department