ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை போலீசில் காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. அவருக்கும் சாம்ராஜ்ஜியம் என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று மகன், மகள் ஆகியோர் வாரிசுகளாக உள்ளனர். 2017 ஆம் ஆண்டு மனைவியை கைவிட்ட வாசு அடுத்த ஆண்டு மௌனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமீபகாலமாக நெல்லூரில் உள்ள போஸ்டல் காலனியில் வசிக்கும் பெண் ஒருவருடன் காவல் ஆய்வாளர் வாசு ரகசிய தொடர்பில் இருந்து வந்தார். தன்னை குழந்தைகளுடன் கைவிட்டு சென்ற கணவன் மீது கடும் கோபத்தில் இருந்த சாம்ராஜ்யத்திற்கு இந்த தகவல் கிடைத்தது.
Also Read: டிராலி பேக்கில் தங்க ஸ்குரூ.. துபாய் டூ ஹைதராபாத் கடத்தல் - சிக்கிய பயணி
இதுதான் சமயம் என்று கருதி காவல் ஆய்வாளரின் ஆசை நாயகி வீட்டுக்கு உறவினர்களுடன் சென்ற சாம்ராஜ்யம் கதவை தட்டி திறக்க செய்து தன்னுடைய கணவன், அவருடைய ஆசை நாயகி ஆகிய இரண்டு பேருடனும் வாக்குவாதம் செய்து இது நியாயமா என்று தட்டிக் கேட்டார்.
உறவினர்கள் முன்னிலையில் கள்ளத்தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளரை அவருடைய மனைவி கையும் களவுமாக பிடித்து தட்டிக் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நெல்லூர் போலீசார் விரைந்து சென்று ஆயுதப்படை காவல் ஆய்வாளர் வாசு, அவருடைய மனைவி சாம்ராஜ்யம் ஆகிய இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.