முகப்பு /செய்தி /இந்தியா / சென்னை ஐஐடியில் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்... தொடரும் சோகம்...!

சென்னை ஐஐடியில் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்... தொடரும் சோகம்...!

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடியில் படித்துவந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷோக்லே கேதார் சுரேஷ். 21 வயதான இவர் சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அம்மாணவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு  உயிரை மாய்த்துக்கொண்டார். உடன் தங்கியிருந்த மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்றபோலீஸார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த மாணவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. தனது சொந்த ஊரில் இளம்பெண் ஒருவருடன் மாணவர் காதலில் இருந்ததாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் காதல் முறிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க; ஆருத்ரா மோசடி வழக்கு- ஆர்.கே.சுரேஷின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம்

top videos

    இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்கான காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Chennai IIT, IIT Madras