முகப்பு /செய்தி /இந்தியா / எனக்கு சீட் தரவில்லை என்றால் 25 தொகுதிகளில் பாதிப்பு... பாஜகவுக்கு முன்னாள் முதலமைச்சர் எச்சரிக்கை

எனக்கு சீட் தரவில்லை என்றால் 25 தொகுதிகளில் பாதிப்பு... பாஜகவுக்கு முன்னாள் முதலமைச்சர் எச்சரிக்கை

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் ஜெக்தீஷ் ஷெட்டர்

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் ஜெக்தீஷ் ஷெட்டர்

எனக்கு சீட் தரவில்லை என்றால் வடக்கு கர்நாடகாவில் 20 முதல் 25 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாஜகவுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முதலில் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இரு நாள்களுக்கு முன்னர் பாஜக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் நடப்பு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் உட்பட பலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்தவர்கள் பாஜகவிற்கு எதிராக போர் கொடி தூக்கினார். இதன் விளைவாக அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மண் சவடி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அதேபோல், முன்னாள் முதலமைச்சாரான பாஜகவின் ஜெகதீஷ் ஷெட்டருக்கும் தேர்தலில் இதுவரை வாய்ப்பு தரவில்லை. இதனால் அவரும் தற்போது கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இன்னும் 12 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதில், ஜெகதீஷ் ஷெட்டர் தனக்கு இடம் கிடைக்க வேண்டும் என மேலிடத்திற்கு தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், "நாளை வரை நான் காத்திருப்பேன். இல்லை என்றால் எனது நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்குவேன். எனக்கு சீட் தரவில்லை என்றால் அது கட்சிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூட இதை ஒப்புக்கொண்டுள்ளார். எனக்கு சீட் தரவில்லை என்றால் வடக்கு கர்நாடகாவில் 20 முதல் 25 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வேட்புமனுதாக்கல்!

top videos

    மேலும், தனது தொகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்களிடம் ஆலோசித்து பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன் என அவர் கூறியுள்ளார். இத்தகைய அழுத்தத்தை ஜெக்தீஷ் ஷெட்டர் தரும் நிலையில், இறுதி வேட்பாளர் அறிவிப்பில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: BJP, Karnataka, Karnataka Election 2023