டெல்லியில் நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து அங்குள்ள மக்களவை சபாநாயகர் இருக்கையில் செங்கோலை நிறுவனார். இதற்கிடையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்துவதாக கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் ஒரு மாத காலமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் அளித்ததாக இவருக்கு சிங்குக்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன.
இவரை கைது செய்ய வேண்டும் எனவும் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் பகுதியில் தீவிரமாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாத் கூறுகையில், ’புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்பி பிரிஜ் பூஷண் பங்கேற்பது நாட்டு மக்களுக்கு தவறான செய்தியை வழங்குவதாக அமையும். நாட்டின் தற்போதைய நிலையை அது பிரதிபலிப்பதாக இருக்கும்.
இதையும் படிங்க: பாஜகவின் 9 ஆண்டு ஆட்சி... மோடியிடம் 9 விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்
யாரெல்லாம் பிரிஜ் பூஷணை காப்பாற்ற நினைக்கிறார்களோ, அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள். அரசு நிர்வாகத்திற்குள்ளாக என்ன நடக்கிறது என எனக்கு தெரியாது. ஆனால், பிரிஜ் பூஷணை காப்பாற்ற யாரோ முயற்சிக்கிறார்கள். இது சரியல்ல, அவர் நாட்டின் பெண்களுக்கு கொடுமை இழைக்கிறார் என புகார் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.