முகப்பு /செய்தி /இந்தியா / சட்டப்பேரவைக்குள் செல்போனில் ஆபாச படம் பார்த்து சிக்கிய பாஜக எம்எல்ஏ.. விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சட்டப்பேரவைக்குள் செல்போனில் ஆபாச படம் பார்த்து சிக்கிய பாஜக எம்எல்ஏ.. விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சட்டப்பேரவைக்குள் ஆபாச படம் பார்த்த எம்எல்ஏ

சட்டப்பேரவைக்குள் ஆபாச படம் பார்த்த எம்எல்ஏ

சட்டப்பேரவைக்குள் ஆபாச படம் பார்த்து சிக்கிய பாஜக எம்எல்ஏவுக்கு கட்சி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • Last Updated :
  • Tripura, India

திரிபுரா மாநில சட்டப்பேரவைக்குள் ஆளும் பாஜக எம்எல்ஏ ஒருவர் அபாச படம் பார்த்து சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் முதலமைச்சர் மாணிக் சாஹா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. சமீபத்தில் தான் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது.

மாநில சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக எம்எல்ஏவான ஜாதாப் லால் நாத் சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறும் போது தனது இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தனது செல்போனில் ஆபாச பட வீடியோக்களை பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்பசா தொகுதி எம்எல்ஏவான ஜதப் லால் நாத்தின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகளும் நெட்டிசன்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இது குறித்து எம்எல்ஏ ஜதாப் லாலிடம் விரைவில் விளக்கம் கேட்கப்படும் என மாநில பாஜக தலைவர் ரஜிப் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். எம்எல்ஏவுக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து புகாருக்கு ஆளான எம்எல்ஏ ஜதாப் லால் விளக்கம் தெரிவித்துள்ளார். பேரவைக்குள் செல்போன் பயன்படுத்த கூடாது என தனக்கு தெரியும், ஆனால் அப்போது தொடர்ச்சியாக எனக்கு செல்போன் அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததால் நான் செல்போனை எடுத்தேன். அப்போது திடீரென ஆபாச படங்கள் ஓடத் தொடங்கியது. ஆனால் உடனடியாக அதை மூடிவிட்டேன் என்று ஜதாப் விளக்கம் தந்துள்ளார்.

இதையும் படிங்க: டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு.. விரைவில் கைதாகிறாரா?

top videos

    சட்டப்பேரவைக்குள் உறுப்பினர்கள் ஆபாச படம் பார்த்து சிக்கியது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே, 2012இல் கர்நாடக மாநில சட்டப்பேரவையில் அன்றை பாஜக அமைச்சர்கள் லக்ஷ்மன் சாவதி மற்றும் சிசி பாடீல் இதே போல ஆபாச படம் பார்த்து மாட்டிக்கொண்டனர்.

    First published:

    Tags: BJP MLA, Obscene, Tripura, Viral Video