கர்நாடகா விஜயநகர் தொகுதியில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு இரண்டு மனைவி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
பொதுவாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் அவர்களது சொத்து விபரங்கள் பேச்சு பொருளாகும். ஆனால் பல்லாரி மாவட்டம் விஜயநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ஒருவரின் சுய விபரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜயநகர் தொகுதியில் சங்கர் தாசர் என்பவர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், அக்காள் தங்கையான இரட்டை சகோதரிகளுடன் தான் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், தங்களுக்கு ஐந்து குழந்தைகள் இருப்பதாகவும் சங்கர் தாசர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read : சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் தல தோனி வரை.. பிரபலங்களின் ப்ளூ டிக்கை நீக்கிய ட்விட்டர்
கடந்த முறை பஞ்சாயத்து தேர்தலில் தான் போட்டியிட்ட போதும், இவ்வாறே குறிப்பிட்டடிருந்ததாகவும், தேர்தல் ஆணையத்தையும் நாட்டையும் ஏமாற்ற தான் விரும்பவில்லை என்பதாலேயே உண்மையான தகவல்களைத் தான் குறிப்பிட்டதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து, அதிகாரிகள் என்ன முடிவெடுத்தாலும் தான் ஏற்றுக்கொள்வேன் என்கிறார். இரண்டு திருமணங்கள் செய்தவர் போட்டியிட தகுதியுடையவரா என்பது குறித்து சட்ட விதிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்று மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.