முகப்பு /செய்தி /இந்தியா / தேர்வில் மெஸ்ஸி குறித்த கேள்வி.. கேரளா சிறுமியின் பதிலை கேட்டு ஆடிப்போன ஆசிரியர் - வைரலாகும் ட்வீட்

தேர்வில் மெஸ்ஸி குறித்த கேள்வி.. கேரளா சிறுமியின் பதிலை கேட்டு ஆடிப்போன ஆசிரியர் - வைரலாகும் ட்வீட்

சிறுமி ரிசா பாதிமா

சிறுமி ரிசா பாதிமா

கேரளாவில் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளி மாணவி எழுதிய பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Kerala, India

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில் முக்கியமானது கால்பந்து. இந்தியாவில் கால்பந்து போட்டிக்கு கிரிக்கெட் அளவிற்கு ரசிகர்கள் இல்லை என்றாலும், கேரளா, மேற்கு வங்கம், கோவா போன்ற மாநிலங்களில் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர்.

குறிப்பாக, கேரளாவில் அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுகல் போன்ற அணியை வெறித்தனமாக பின்பற்றும் ரசிகர்கள் உள்ளனர். அப்படி ஒரு குட்டி ரசிகையின் செயல் தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுபள்ளி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ரிசா பாதிமா.

4ஆம் வகுப்பு படிக்கும் இவர்  சமீபத்தில்  எழுதிய மலையாள பாடத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறுமி எழுதிய பதில் தான் தற்போது டிரென்டாகி வருகிறது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குறித்து கட்டுரை எழுதுங்கள் என 5 மார்க் கேள்வி கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நீயும் இப்போ போலீஸ் தான்.. 5 வயது சிறுவனுக்கு பணி ஆணை வழங்கிய எஸ்பி.. சத்தீஸ்கரில் நெகழ்ச்சி சம்பவம்

அதற்கு அந்த சிறுமி நான் பிரேசில் நாட்டின் ரசிகை. எனக்கு வீரர் நெய்மாரை தான் பிடிக்கும்.மெஸ்ஸியை பிடிக்காது என பதில் எழுதியுள்ளார். சிறுமியின் இந்த பதிலை பார்த்து ஆசிரியை ஷாக் ஆனது மட்டுமல்லாது அதை மற்றவர்களிடம் காட்டியுள்ளார்.

top videos

    பின்னர் சிறுமியிடம் அழைத்து இது குறித்து விசாரித்துள்ளார். அதற்கு அந்த சிறுமி நான் பிரேசில் ரசிகை தான். தேர்வு தாளில் மெஸ்ஸின் போட்டோவை பார்த்ததும் மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன் என்றுள்ளார். சிறுமியின் இந்த செயலும் அவர் பதில் எழுதிய தேர்வு தாளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    First published:

    Tags: Kerala, Lionel Messi, Neymar jr, School student, Viral