முகப்பு /செய்தி /இந்தியா / இந்திய மாணவி லண்டனில் மரணம்.. கடலில் விளையாட சென்ற போது நேர்ந்த துயரம்

இந்திய மாணவி லண்டனில் மரணம்.. கடலில் விளையாட சென்ற போது நேர்ந்த துயரம்

உயிரிழந்த மாணவி தேஜஸ்வினி

உயிரிழந்த மாணவி தேஜஸ்வினி

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவி ஒருவர் கடலில் விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaLondonLondon

தெலங்கனா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சசிதர ரெட்டி - ஜோதி தம்பதி. இவர்கள் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாய் தேஜஸ்வினி என்ற மகள் இருந்தார். 24 வயாதன தேஜஸ்வினி உயர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றுள்ளார். அங்குள்ள க்ரான்பீல்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டபடிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி அன்று பிரிங்டன் கடற்கரையில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார் தேஜஸ்வினி. நீச்சலில் ஆர்வம் கொண்ட அவர், கடலில் குளித்த போது நீர் அலையில் தேஜஸ்வினியும் அவரது தோழிகளும் சிக்கிக் கொண்டனர்.

எவ்வளவோ போராடியும் தேஸ்வினி மற்றும் தோழிகளால் கரை சேர முடியவில்லை. எனவே, நீரில் மூழ்கி தேஜஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி செய்தியை கேட்ட தேஜ்ஸ்வினியின் பெற்றோர், தங்கள் ஒரே பிள்ளையை பறிகொடுத்த ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். தேர்வு முடிந்த பின்னர் ஓய்வுவாக இருப்பதால் நண்பர்களுடன் விளையாட செல்வதாக வீட்டில் தெரிவித்துள்ளார் தேஜஸ்வினி.

இதையும் படிங்க: இந்தியர்கள் மத்தியில் குறையாத அமெரிக்கா மோகம்... சட்ட விரோதமாக நுழைய முயன்ற 1.49 லட்சம் பேர் கைது..!

விளையாட்டு துயரமாக முடிந்ததாக கூறும் அவரது பெற்றோர், மகளின் உடலை இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நிறைய உதவிகளை செய்ததாக தெரிவித்தார். மாநில அமைச்சர் கேடி ராமாராவ் மற்றும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். அத்துடன், உடலை இந்தியா கொண்டு வருவதற்காக பிரிட்டன் தூதரகத்துடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: London, Telangana, UK, Youth drown in water