முகப்பு /செய்தி /இந்தியா / பிளாஸ்டிக் கவரில் பெண்ணின் தலை.. ஃபிரிட்ஜில் துண்டு துண்டாக உடல் பாகங்கள் - ஹைதராபாத்தை பதற வைத்த கொலை

பிளாஸ்டிக் கவரில் பெண்ணின் தலை.. ஃபிரிட்ஜில் துண்டு துண்டாக உடல் பாகங்கள் - ஹைதராபாத்தை பதற வைத்த கொலை

ஹைதராபாத் கொலை

ஹைதராபாத் கொலை

அனுராதாவை கொலை செய்த பின்னர் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தினமும் அவரது போனில் இருந்து மெசேஜ் அனுப்பி பேசி வந்துள்ளார்.

  • Last Updated :
  • Hyderabad, India

தலைநகர் டெல்லியை மிரள வைத்தது போல் ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது. மே 17-ம் தேதி ஹைதராபாத்தை நகர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது முசி ஆற்றங்கரை ஓரத்தில் கருப்பு நிறக் கவரில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் தலை மட்டுமே கிடைத்ததால் போலீஸாருக்கு இந்த வழக்கு தலைவலியாக அமைந்தது. இந்த வழக்கில் பெண்ணின் அடையாளம் கண்டுபிடிப்பதிலும் அடையாளங்களை கண்டறிவது போலீஸாருக்கு பெரும் சவலாக இருந்தது. அந்தப்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா... அல்லது வேறு காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டாரா என கேள்விகள் அடுக்கடுக்காக இருந்தது. இந்த வழக்கில் விடைகளை கண்டறிய சிசிடிவி கேமராவின் உதவியை நாடியது போலீஸ்.

அந்தப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சல்லடை போட்டனர். 60 வாகனங்கள் 90 நபர்கள் சந்தேக வலையத்தில் சிக்கினர். அந்த 90 நபர்களில் பாலீத்தின் பைகளை வீசும் நபர்களை குறிவைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். போலீசாரின் தீவிர முயற்சியில் இந்த வழக்கில் சந்திர மோகன் என்பவர் சிக்கினர். சந்திர மோகனின் வாக்குமூலம் போலீஸாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நதிக்கரையில் துப்புறவு தொழிலாளர்கள் கண்டெடுத்த பெண்ணின் தலை அனுராதா ரெட்டி ( வயது 55) என்பவருடையது என்பது தெரியவந்தது. அனுராதாவை சந்திரமோகன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

விதவையான அனுராதா தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டின் ஒரு போர்ஷனில் கடந்த 15 ஆண்டுகளாக சந்திரமோகன் குடியிருந்து வந்துள்ளார். சந்திரமோகன் - அனுராதா லிவ் இன் ரிலேஷன்சிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணாமாக சந்திரமோகன் அனுராதாவிடம் இருந்து சுமார் 7 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். வாங்கிய பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அனுராதாவை கொலை செய்துவிட்டு பணத்தை அபகரித்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். இந்நிலையில் மே 12-ம் தேதி சந்திரமோகனின் திட்டத்தின்படி பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அனுராதாவை கொலை செய்யும் முடிவில் இருந்தவர் கத்தியால் அவரை குத்தி படுகொலை செய்துள்ளார். அதன்பின்னர் உடலை துண்டு துண்டுகளாக வெட்ட கட்டிங் மெஷின் இரண்டு வாங்கியுள்ளார். உடலை துண்டு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் கவரில் மாற்றியுள்ளார். இதனையடுத்து மே 15-ம் தேதி ஒரு ஆட்டோவில் அனுராதாவின் தலையை மட்டும் எடுத்து வந்து குப்பையோடு சேர்த்து எடுத்து வந்து வீசியுள்ளார். போலீசாரிடம் சிக்கிய சந்திரமோகனிடம் மீதமுள்ள உடல் பாகங்கள் எங்கே என விசாரித்த போது அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார். உடல் பாகங்கள் கெட்டு துர்நாற்றம் வீசாமல் இருக்க ஃபிரிட்ஜில் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

அனுராதாவை கொலை செய்த பின்னர் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தினமும் அவரது போனில் இருந்து மெசேஜ் அனுப்பி பேசி வந்துள்ளார். கொலைக்கு பின்னர் டெட்டால் , பெனாயில் வீட்டை சுத்தம் செய்துள்ளார். எந்த துர்நாற்றமும் வீசக்கூடாது என்பதற்காக ஊதுபத்தி, சாம்பராணி தினமும் பற்ற வைத்து வந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

top videos

    இந்த வழக்கு முதலில் போலீஸாருக்கு மிகவும் சவாலாக இருந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மாநிலம் முழுவதும் மாயமான பெண்கள் குறித்து விவரங்களை சேகரித்தனர். போலீஸார் கைப்பற்றிய பெண்ணின் தலையின் புகைப்படம் கொண்டு வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டனர். சமூகவலைதளம் மற்றும் பொது இடங்களில் புகைப்படத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னரே இந்த வழக்கில் சந்திரமோகன் சிக்கியுள்ளனர். தொடர்ந்து போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published:

    Tags: Crime News, Hyderabad, Tamil News