தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். போலீஸ் கான்ஸ்டபிளான இவர் உயர் நீதிமன்றத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு ஷோபானா என்பவருடன் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, அவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கணவர் ராஜ்குமாருக்கும் மனைவி ஷோபனாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
காவலர் ராஜ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக மனைவியுடன் சண்டை போட்டு விவாகரத்து கேட்டு வற்புறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் இரு வீட்டாரும் தலையிட்டு சமாதானம் செய்து வந்துள்ளனர்.
இருப்பினும் கணவர் ராஜ்குமார் மனைவி ஷோபனாவை சமீப காலமாக தாக்கி கொடுமைபடுத்தி வந்துள்ளார். இதை கண்டித்து கடந்த வியாழக்கிழமை அன்று ஷோபனாவின் சகோதரர் ராஜ்குமார் பணிபுரியும் இடத்திற்கு சென்று தட்டிகேட்டுள்ளார்.
இனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் வீட்டிற்கு வந்து தனது மனைவி ஷோபனனாவிடம் சண்டை போட்டு தாக்க தொடங்கியுள்ளார். அப்போது அவர்களின் 15 வயது மகனும் வீட்டில் இருந்துள்ளார். தந்தையை தடுக்க மகன் முயற்சி செய்த போதும் அது பலனளிக்கவில்லை.
பயந்து போன மனைவி ஷோபனா வீட்டில் இருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால், ஆத்திரத்தில் கணவர் ராஜ்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். தந்தையை தடுக்க முயன்ற மகனும் இதில் காயமடைந்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 36,000 ஆசிரியர்களின் பதவி பறிபோனது.. கொல்கத்தா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
மனைவி ஷோபானா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடைந்த நிலையில், ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். மகன் காவல்துறையிடம் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நேரடி சாட்சியமான மகனிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறை ராஜ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Husband Wife, Hyderabad, Murder case, Police