முகப்பு /செய்தி /இந்தியா / ராஜஸ்தான் மணல்... உபி ஜல்லி... தமிழகத்தின் செங்கோல்... புதிய நாடாளுமன்ற கட்டத்தின் சிறப்புகள் என்ன?

ராஜஸ்தான் மணல்... உபி ஜல்லி... தமிழகத்தின் செங்கோல்... புதிய நாடாளுமன்ற கட்டத்தின் சிறப்புகள் என்ன?

புதிய நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்றம்

இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் விதமாக நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானத்திற்காக பொருள்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

  • Last Updated :
  • Delhi, India

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரின் கார்பெட்கள், திரிபுரா மாநில அகர்த்தலாவின் மூங்கில்களை கொண்ட தளம், ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டு செதுக்கப்பட்ட கல் சிற்பங்கள் என நாட்டின் பன்முக காலசார அம்சத்தை கொண்ட புதிய நாடாளுமன்ற கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறா்.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் காட்சிகளைப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கான குடிமக்களின் குரல் பதிவு வடிவிலான எண்ணங்களைத் மோடி அதில் கோரியுள்ளார். ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது, "புதிய நாடாளுமன்ற கட்டடம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதத்தை அளிக்கும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கட்டடத்தின் தோற்றத்தை வீடியோ வழங்குகிறது. உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துகின்ற உங்களின் சொந்தக் குரலுடன் இந்த வீடியோவைப் பகிருமாறு நான் சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறேன். இவற்றில் சிவற்றை ட்விட்டரில் நான் மறுபதிவு செய்வேன். #MyParliamentMyPride என்பதைப் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்." என்றுள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள வீடியோவில் புதிய மக்களவை மற்றும் மாநிலங்களவையின் பொலிவான தோற்றங்கள் காணப்படுகின்றன. இந்த புதிய கட்டடத்தில் பயன்படுத்தியுள்ள தேக்கு மரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், சிவப்பு மற்றும் வெள்ளை மணல்கள் ராஜஸ்தானின் சர்மதுராவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

கேஷரியா பச்சை கற்கள் உதய்பூரில் இருந்தும், சிவப்பு கிரைனேட் கற்கள் அஜ்மீரில் இருந்தும், வெள்ளை மார்பிள் கற்கள் அம்பாஜியில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரங்குகளில் உருக்குகள் டாமன் மற்றும் டையுவில் இருந்தும், மும்பையில் இருந்து பர்னிசர்களும், ராஜஸ்தான் ராஜ்நகர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் இருந்து ஜல்லி எடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் கட்டுமானத்தில் ஒட்டுமொத்த நாட்டின் பங்களிப்பு உள்ளது. இது ஒரே இந்தியா உன்னத இந்தியா என்பதை பிரதிபலிக்கிறது. அதேபோல, அசோக முத்திரைக்கான பொருள்கள் மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்பூரில் இருந்தும் கொண்டுவரப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலங்களவை சுவர்களில் உள்ள மிகப்பெரிய அசோக சக்கரத்திற்கான பொருள்கள் மத்தியப் பிரதேச இந்தூரில் இருந்து கொண்டுவரப்பட்டது.

கல் மற்றும் சிற்ப வேலைகள் அனைத்தும் ராஜஸ்தானின் அபுரோடு மற்றும் உதய்பூரைச் சேர்ந்த சிற்பிகளால் செய்யப்பட்டது. மேலும், கட்டடத்திற்கான M-sand மணல் ஹரியானாவில் இருந்து எடுத்துவரப்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாடாளுமன்றத்தின் கட்டுமானத்திற்காக பொருள்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் 25 கட்சிகள் பங்கேற்கின்றன. 20 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தது.

இதையும் படிங்க: நூற்றாண்டுகளை கடந்த உலகின் நாடாளுமன்ற கட்டிடங்கள்!

திறப்பு விழா அன்று நியாயமான, சமத்துவமான நிர்வாகத்தின் புனித அடையாளமாக விளங்கும் செங்கோலினைப் பிரதமர் பெற்று அதனைப் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவவிருக்கிறார். தமிழ்நாட்டின் முன்னணி சைவ மடாதிபதிகள் இந்த செங்கோலை பிரதமரிடம் தரவுள்ளனர். இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்படவுள்ளது.

top videos

    நாடாளுமன்ற திறப்பு விழாவில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் பிரதமர் ஹெச்டி தேவாகவுடா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். முக்கோண வடிவிலான நான்கு அடுக்கு தளம் கொண்ட புதிய நாடாளுமன்ற கட்டத்தின் மொத்த சுற்றளவு 64,500 சதுர மீட்டாரகும். இதற்கு கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்ம துவார் என்று மூன்று நுழைவு வாயில்கள் உள்ளன.

    First published:

    Tags: Parliament, PM Modi