நாம் டூவீலர் அல்லது கார் வாங்கும்போது ‘எத்தனை கிலோ மீட்டர் மைலேஜ் தரும்?’ என்றுதான் முதலாவதாக கேட்போம். இதற்கான பதில் நமக்கு திருப்தி அளித்தால் மட்டும்தான், புதிய வாகனம் வாங்கியது திருப்தியை கொடுக்கும். அதே நேரம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து, ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் எத்தனை கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்கிற விபரங்கள் பலருக்கும் தெரியாது. இதுபற்றி யாரும் அவ்வளவாக யோசித்திருக்க மாட்டார்கள்.
மைலேஜ் என்பது ஒரு வாகனத்தின் எரிபொருள் செயல்திறனைப் பற்றியதாகும். அதாவது ஒரு லிட்டர் எரிபொருளை உட்கொண்டால் ஒரு வாகனம் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதுதான் மைலேஜ் என்ற சொல்லுக்கு விளக்கம். மற்ற வாகனங்களைப் போலவே, ரயிலின் மைலேஜ் பல காரணிகளைப் பொறுத்து அமையும். ஒரு ரயில் இத்தனை கிலோ மீட்டர்தான் லிட்டருக்கு கொடுக்கும் என்று, உறுதியாக நேரடியாகச் சொல்வது கடினம், ஏனெனில் அதன் மைலேஜ் பாதை, எந்த வகையான பயணிகள் ரயில் - எக்ஸ்பிரஸ், அதிவிரைவு, பயணிகள் மற்றும் அதில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும்.
இதையும் படிங்க; வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்தால் தான் இனி சம்பளம்... மத்திய அரசு அதிரடி..!
ஒரு ரயிலின் மைலேஜைப் பாதிக்கும் மிகப்பெரிய காரணி அது எத்தனை பெட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதுதான். பெட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், இயந்திரம் குறைந்த சுமைகளை இழுத்தால் போதும். ஒரு டீசல் இன்ஜினின் மைலேஜ் ஒரு மணி நேர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 24-25 பெட்டிகள் கொண்ட ரயில்களின் எஞ்சின் ஒவ்வொரு 1 கிமீ தூரத்திற்கும் 6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் ரயில்களை விட சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் குறைவான டீசலைப் பயன்படுத்துகின்றன என்ற தகவல் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.
பயணிகள் ரயில் என்ஜின்கள் ஒவ்வொரு 1 கிமீக்கும் 5-6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துகின்றன. பயணிகள் ரயில்கள் ஏறக்குறைய அனைத்து நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டியதுதான் இதற்கான காரணமாகும். 12 பெட்டிகளை இழுக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் 1 கிமீ தூரம் பயணிக்க 4.5 லிட்டர் டீசல் செலவழிக்கிறது. இந்த வகையில் பார்த்தால் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் ஒரு லிட்டர் டீசலில் 230 மீட்டர் தூரம் வரையிலும், பேசஞ்சர் ரயில்கள் 180-200 மீட்டர் வரையிலும் தோராயமாக செல்லாம். இப்போது ரயில்கள் எத்தனை மைலேஜ் தருகிறது என்று யாரும் கேட்டால் பதில் சொல்வீர்கள் தானே!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Train