பெங்களூரு மகாலட்சுமிபுரம் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது . பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் தனியாக வசிக்கும் 82 வயதான கமலம்மா என்று போலீசார் அடையாளம் கண்டனர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சித்தராஜூ (34), அசோக் (40), அஞ்சனமூர்த்தி (33) ஆகியோர் தங்கள் கடனை அடைப்பதற்காக கமலம்மாவைக் கொன்று தங்க நகைகளைக் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
மே 27 அன்று காலை, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், அஞ்சனமூர்த்திக்கு சொந்தமான ஆட்டோவின் நம்பர் பிளேட்டை அகற்றிவிட்டு, மூதாட்டி கமலம்மா வீட்டின் அருகே கண்காணித்துள்ளார். பின்னர் கொலையாளிகள் மூதாட்டி கமலம்மாவை அணுகி, தங்கள் வாகனத்தை நிறுத்த கேரேஜில் உள்ள இடத்தை வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்டார்கள். அதே நாள் மாலை, அவர்கள் மற்றொரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து வந்துள்ளனர். பின்னர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரின் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கினார். கொலை செய்யப்பட்ட நாளில் பாதிக்கப்பட்டவரின் வீட்டின் அருகே நம்பர் பிளேட் இல்லாத ஆட்டோ சுற்றிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். ஆட்டோவில் பதிவு எண் இல்லை என்றாலும், அதன் பின் பக்கத்தில் ‘கிங் கோலி’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதனையடுத்து கொலைக் குற்றவாளிகள் மூவரும் பின்னர் மைசூரில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அசோக் என்ற குற்றவாளிக்கு ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது மற்றும் சில கடன்கள் இருந்ததால் மூதாட்டியை கொலை செய்து கொள்ளை அடித்தது விசாரணையில் தெரிய வந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangalore, Crime News, Karnataka