முகப்பு /செய்தி /இந்தியா / வெள்ள நீரில் சிக்கிய கார்.. நியூஸ்18 நிருபரின் சமயோஜித செயலால் தப்பிய 5 உயிர்கள் - குவியும் பாராட்டு!

வெள்ள நீரில் சிக்கிய கார்.. நியூஸ்18 நிருபரின் சமயோஜித செயலால் தப்பிய 5 உயிர்கள் - குவியும் பாராட்டு!

நியூஸ்18 நிருபர் மஞ்சுநாத் சந்திரா

நியூஸ்18 நிருபர் மஞ்சுநாத் சந்திரா

பெங்களூரு நியூஸ்18 நிருபர் மஞ்சுநாத்தின் சமயோஜித செயலால் மழை வெள்ள நீரில் சிக்கித் தவித்த 5 உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலத்தில் இரு நாள்களுக்கு முன்னர் கொட்டி தீர்த்த கனமழையில் சிக்கி பெண் ஐடி ஊழியர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உயிர்கள் News18 நிருபரின் சமயோஜித நடவடிக்கையால் காக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் கனமழை கொட்டித் தீர்த்தது. விதான் சவுதா அருகே உள்ள கே.ஆர். சர்க்கிள் சுரங்கப் பாதையில் மழை நேங்கி தேங்கி நின்ற நிலையில், அவ்வழியாக சென்ற கார் ஒன்று அதை கடந்து சென்றுள்ளது. இதில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் பானு ரேகா தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.

பெங்களூரு இன்போசிஸ் நிறுவனத்தில் சமீபத்தில் தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் இங்கு புதிய வீடு ஒன்றை பார்த்து குடியேற இருந்தார். இதற்காக ஊரிலிருந்த தனது குடும்பத்தார் அழைத்து தனது புதிய வீட்டை காட்டியுள்ளார். இவர்கள் அனைவரும் வீட்டை பார்த்து விட்டு திரும்பும் போது தான் கார் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த நீரில் கார் சிக்கியுள்ளது.

இதில் காரில் பயணித்த 5 பேரும் மூழ்கிய நிலையில், அந்த நேரத்தில் நியூஸ் 18 நிருபர் மஞ்சுநாத் சந்திராவும் அங்கு தான் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். கார் நீரில் மூழ்கியதை பார்த்ததும் பதறிப்போன அவர், உடனடியாக யோசித்த மாநகராட்சியின் குயிக் ரெஸ்பான்ஸ் டீம் (QRT)க்கு தகவல் அளித்துள்ளார்.

அவர்கள் உடனடியாக விரைந்து அங்கு சென்று பானுரேகாவின் குடும்பத்தார் ஆறு பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், இளம்பெண் பானு ரேகா மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மருத்துவ சிகிச்சையில் தேறி உயிர் பிழைத்தனர். நியூஸ்18 நிருபர் மஞ்சுநாத் உரிய நேரத்தில் கவனித்து அதிகாரிகளை உஷார்படுத்தியதால் 5 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுத்தையுடன் சண்டை போட்டு மகள்களை காப்பற்றிய துணிச்சல் தந்தை... குவியும் பாராட்டு...!

கர்நாடகா டிஜிபி பிரவீன் சூட் உள்ளிட்ட பலரும் மஞ்சுநாத்தின் செயலை பாராட்டி வருகின்றனர். அவர் உரிய நேரத்தில் எங்களை தொடர்பு கொண்டு சரியான முறையில் நிகழ்வை கூறியதால், நாங்கள் அங்கு உடனடியாக சென்று அவர்களை காப்பற்றத் தொடங்கினோம். அடுத்தவர்கள் ஆபத்தில் இருக்கும்போது கூட அதை வீடியோ எடுத்து போஸ்ட் போடும் இந்த காலத்தில் மஞ்சுநாத்தின் இந்த செயல் பாராட்டத்தக்கது என பிரவீன் சூட் கூறியுள்ளார்.

First published:

Tags: Bengaluru, Karnataka