ஹிமாச்சல பிரதேசத்தில் பழங்குடியினர் வசிக்கும் Lahaul & Spiti மாவட்டம், அதன் தனித்துவ பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்காக பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள கீலாங் பஞ்சாயத்து (Keylong panchayat) திருவிழாக்கள் மற்றும் திருமணங்களில் பீர் வழங்குவதை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது தவிர கீலாங் பஞ்சாயத்து உள்ளூர் பால் விலையை லிட்டருக்கு ரூ.40-ல் இருந்து ரூ.50-ஆக உயர்த்தியுள்ளது. கிராம சபையின் முக்கிய கூட்டத்தில் இது போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இமாச்சலப் பிரதேசத்துடன் இருக்கும் Lahaul & Spiti பள்ளத்தாக்கில் இளைஞர்களிடையே காணப்படும் அதிகரித்த போதை பழக்கம் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இங்கிருக்கும் இளைஞர்களை போதையில் இருந்து விலக்கி வைக்க பொது நிகழ்ச்சிகளில் பீர் வழங்கப்படுவதை தடை செய்ய பஞ்சாயத்து மக்கள் முடிவு செய்தனர்.
தவிர திருவிழாக்கள் மற்றும் திருமணங்களில் வீண் மற்றும் விரய செலவுகளை தடுக்கவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தீர்மானம் பற்றி பேசி இருக்கும் கீலாங் பஞ்சாயத்து தலைவர் சோனம் ஜாங்போ. சமீபத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் திருமணங்கள் மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வீண் செலவுகளை தடுக்க பீர் வழங்குவதை நிறுத்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
Read More : மாந்திரீகம் செய்வதாக கூறி கோவையில் மூதாட்டியிடம் நகை பணம் பறிப்பு!
மேலும் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் இளைஞர்களிடையே போதை போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் சோனம் ஜாங்போ. கால்நடை வளர்ப்போர் பயன்படும் வகையில், உள்ளூர் பால் விலையும் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட சமீபத்திய இந்த பஞ்சாயத்து கூட்டத்தில், திருமணங்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களில் "வெளிப்புற கலாச்சாரங்கள்" கலப்பதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஜாங்போ கூறினார்.
ஜிலா பரிஷத் உறுப்பினரான குங்கா போத் பேசுகையில், கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாப்பதில் இளைஞர்களும் அக்கறையை வெளிப்படுத்துவதால் இது தொடர்பாக விரைவில் ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என நம்புவதாக கூறினார்.மேலும் இந்த கூட்டத்தில் கீலாங் மார்க்கெட்டில் ஒன்-வே வெஹிகிள்-ஸைஅறிமுகப்படுத்துதல், சுகாதாரத்தை பராமரித்தல், பஞ்சாயத்துகளை அழகுபடுத்துதல் மற்றும் ரோஹ்தாங் பாஸின் கீழ் அடல் சுரங்கப்பாதை கட்டப்பட்டதைத் தொடர்ந்து கீலாங்கிற்கான வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால் டூரிஸ்ட்களை வேறு இடங்கள் வழியாக திருப்பி விடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முன்னதாக Kinnaur மாவட்டத்தின் ஹாங்ராங் பள்ளத்தாக்கில் பாலிவுட் டைப் நவீன திருமணங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. பழங்குடியினர் மாவட்டமான Lahaul Spiti-யின் பல பஞ்சாயத்துகளில், பெண்கள் காடுகளில் மரங்களை வெட்டுவதற்கும் தடை விதித்துள்ளனர். சட்ட விரோதமாக யாராவது மரங்களை வெட்டினால் அவர் மீது பஞ்சாயத்து அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Himachal Pradesh, Trending, Viral