முகப்பு /செய்தி /இந்தியா / 20 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆல்டோ காரில் சட்டசபைக்கு சென்ற ஹிமாச்சல் முதலமைச்சர்

20 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆல்டோ காரில் சட்டசபைக்கு சென்ற ஹிமாச்சல் முதலமைச்சர்

ஹிமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு

ஹிமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு

ஹிமாச்சல் மாநில முதலமைச்சர் தன்னுடைய முதல் பட்ஜெட் கூட்டத்திற்கு 20 வருடங்கள் பழமைவாய்ந்த காரில் வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Himachal Pradesh, India

ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு, தன்னுடைய பழைய மாருதி ஆல்டோ காரில் சட்டசபைக்கு வந்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மாநில முதல்வர்களுக்கு பாதுகாப்பு பந்தோபஸ்து வழங்கப்படும். பெரிய அளவு பாதுகாப்பு அம்சங்கள் இன்றி இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சட்டமன்றத்துக்கு சென்றுள்ளார். தனது அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள ஓகோவரில் இருந்தே இந்த காரில்தான் அவர் வந்திருக்கின்றார். முதலமைச்சருடன் சேர்ந்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரோஹித் தாக்கூர் மற்றும் லாஹவுல்-ஸ்பிதி எம்எல்ஏவும் அந்த காரிலேயே வந்திருக்கின்றனர்.

முதலில் மாருதி சுஸுகி ஆல்டோவை நுழைவாயிலை நெருங்கியபோது அதிகாரிகள், அந்த காரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். பின்னர் உள்ளே இருப்பது முதலமைச்சர் என்பதை அறிந்த உடனே அதிகாரிகள் அந்த காரை முன்னேறி அனுமதித்தனர். பொதுவாக, பாதுகாப்பு வீரர்களின் படை சூழ மிகவும் பிரமாண்ட காரிலேயே சிஎம் கான்வாய் சட்டமன்றத்துக்கு வரும். இது இல்லாமல் வந்ததால் அதிகாரிகளே சற்று குழப்பமடைந்துவிட்டனர்.

இதன் விளைவாகவே முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு வந்த ஆல்டோ தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றது. மிகவும் எளிமையான வாழ்க்கைக்குப் பெயர் போனவர் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு. இவர் பல நேரங்களில் பாதுகாப்பு வீரர்கள் இல்லாமலேயே பொதுமக்களுடன் கலந்துரையாடுவது, நடமாடுவது உள்ளிட்டவற்றைச் செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே தன்னுடைய எளிமைத் தன்மையை தன்னுடைய காரின் வாயிலாகவும் அவர் காண்பித்திருக்கின்றார். கடந்த ஆண்டு டிசம்பரிலேயே சுக்விந்தர் சிங் சுக்கு மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். இது அவரது முதல் சட்டசபை பட்ஜெட் ஆகும். 20 ஆண்டுகள் பழைய மாருதி சுஸுகி ஆல்டோவில் அவர் தோன்றுவது இது முதல் முறையாகும்.

Also Read : பலே திட்டம்... பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் பைக் திருட்டு.. வைரலான வீடியோ

மக்கள் மனதில் தனி இடம் பிடிக்க அவர் இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. கடந்த காலங்களில் இதேபோல் வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மாற்று வாகனங்களில் சட்டப்பேரவைக்கு வந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சரின் இந்த செயலை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர். இதுகுறித்த வீடியோக்களும், படங்களும் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி கொண்டிருக்கின்றது.

First published:

Tags: Himachal CM, Himachal Pradesh