முகப்பு /செய்தி /இந்தியா / வெப்ப அலை ஓய்ந்தது... வெயில் தாக்கம் இனி படிப்படியாக குறையும்... வானிலை அப்டேட்..!

வெப்ப அலை ஓய்ந்தது... வெயில் தாக்கம் இனி படிப்படியாக குறையும்... வானிலை அப்டேட்..!

வெப்ப அலை

வெப்ப அலை

Indian Meteorological department | இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை தற்பொழுது ஓய்ந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Jammu and Kashmir, India

நாட்டில் வெப்ப அலை ஓய்ந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் முத்து முத்தாக ஆலங்கட்டி மழை பொழிந்தது.

இந்தியாவில் வெப்பத்தின் அளவு இனி படிப்படியாக குறையத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் திடீரென்று ஆலங்கட்டி மழை பொழிந்தது. புற்கள் மீது விழுந்த ஆலங்கட்டிகள், வெண்பூக்கள் போன்று காட்சி அளித்தன.

மேலும் படிக்க... Read More : 2000 ரூபாய் கொடுத்ததால் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்த பங்க் ஊழியர்..

தொடர் கனமழையால் ஜம்முவின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனிடையே மலை பிரதசேங்களிலும் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

top videos

    வடகிழக்கு மாநிலங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    First published:

    Tags: Heat Wave