முகப்பு /செய்தி /இந்தியா / நீதிமன்றத்தில் புகுந்து மனைவி மீது சராமாரியாக துப்பாக்கிச் சூடு... கணவர் வெறிச்செயல்..!

நீதிமன்றத்தில் புகுந்து மனைவி மீது சராமாரியாக துப்பாக்கிச் சூடு... கணவர் வெறிச்செயல்..!

தூப்பாக்கி சூடு

தூப்பாக்கி சூடு

தனிப்பட்ட பகை காரணமாக மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

டெல்லி நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

தெற்கு டெல்லியில் உள்ள சாகேத்(Saket) பகுதியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நீதிமன்ற வளாகத்தில் வழங்கறிஞர்களுக்கான கட்டத்திற்கு வெளியே நின்றிருந்த தனது மனைவியை, வழக்கறிஞர் போல உடையணிந்து வந்த நபர் துப்பாக்கியால் சுட்டார்.

அலறியபடி அந்த பெண் அங்கும் இங்கும் ஓடிய போதும் துரத்திச் சென்று அடுத்தடுத்து 4 முறை துப்பாக்கியால் சுட்டார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கிச்சூட்டைக் கண்டு அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.

Also Read : திருப்பதியில் திடீர் ஐஸ் மழை.. பக்தர்கள் உற்சாகம்

top videos

    இதில், துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியிலும், அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்பட்ட பகை காரணமாக மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Court, Delhi, Gun fire, Gun shot